BloggerTopAd:

wow gold|wow powerleveling

நிகழ்வு

செய்திகளும் விமர்சனங்களும்.....

My Photo
Name:
Location: துபாய், அமீரகம், United Arab Emirates

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்

Sunday, July 10, 2005

மனைவியின் சொத்தை திருடிய கணவன் கைது...

இஸ்லாம் பெண்களை அடிமைகளாக நடத்துகிறது என்று பல 'கற்றறியாத' சிந்தனையாளர்கள் தங்கள் intellectual வாதத் திறமையையும், பெண் விடுதலை பேசுகிறோம், என்ற பெயரில் இஸ்லாமியத் தாக்குதல் நடத்தும் பல ' திறனாய்வாளர்களும் ' இந்தச் செய்தியைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

GULF NEWS ஜுலை 10, 2005 தேதியிட்ட நாளிதழில் வந்துள்ள செய்தி தான் நீங்கள் மேலே கண்ட தலைப்பு. செய்தி இது தான் -

A businessman who misappropriated his wife's money to buy two Ferraris and a Maserati car has been jailed. The 35 year old UAE national businessman, identified as M.F., will have to spend a year in jail, a court has ruled.

செய்தியின் விரிவாக்கமாவது -

வியாபாரம் செய்கிறேன் - உன் பணத்தைக் கொடு என்று கேட்டு வாங்கிக் கொண்டான் கணவன் தன் மனைவியிடமிருந்து, பவர் ஆஃப் அட்டார்னியுடன். வாங்கிக் கொண்டு பல வியாபாரங்கள் நடத்துகிறேன் என்று போக்குக் காட்டிக் கொண்டே, சொகுசுக் கார்களை வாங்கிக் கொண்டான். (பின்னர் அதை விற்று லாபம் பண்ணிக் கொள்ளலாம் என்ற சப்பைக் கட்டு வேறு.) மனையின் 3 மில்லியன் திர்ஹம்களை இப்படியாக செலவு செய்ய, விழித்துக் கொண்ட மனைவி, பல்வேறு கணக்குகளையும் சரி பார்க்க, அப்பொழுது தான் அவன் தன்னை ஏமாற்றுகிறான் என்று அறிந்து கொண்டாள். பின்னர் அவனுடன் சமாதானமே செய்து கொள்ள முடியாது என்ற நிலைமையில் விவாக ரத்து செய்து விட்டு, நீதிமன்ற வாசல்படி ஏறுகிறாள் - தன் சொத்தை மீட்டுத் தருமாறு.

கவனிக்க - முதலில் பெண்ணான அவளால் தன் கணவனை விவாகரத்து செய்ய முடிகிறது. இஸ்லாத்தில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே. தாலி என்ற புனித செண்டிமெண்டெல்லாம் செல்லுபடியாகாது. இதுவே பெண்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு முக்கிய உரிமை தான். இன்று பல நாடுகளிலும், குடியாட்சி ஏற்பட்டு பின்னரே சட்டம் இயற்றப்பட்டு, சொத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதுவும், இந்தியா போன்ற ஆணாதிக்கம் மிக்க நாடுகளில் அது ஏட்டளவில் தான் உள்ளது. இஸ்லாத்தில் இந்த உரிமைகள் 1400 வருடங்களுக்கு முன்னரே கொடுக்கப்பட்டு விட்டது. ஏட்டளவில் இல்லை. இஸ்லாமிய சட்டத்தின் படி நடக்கும் ஆட்சியில், ஒரு பெண்ணால், தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முடிகிறது. பெண்ணினுடைய சொத்தை, வருமானத்தை அவள் விரும்பினாலன்றி வேறு யாரும் எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக எந்த ஆண்மகனுக்கும் அதில் உரிமை கிடையாது. அவளாக விரும்பிக் கொடுக்கும் வரை.

இதுபோன்று தான் - பெண்களுக்கு தட்சிணை கொடுப்பதும். ஒரு பெண்ணை மணந்து கொள்பவன் - அவள் சுதந்திரமாக வாழ்க்கை நடத்த போதுமான அளவிற்கு பொருள் கொடுக்க வேண்டும். பின்னாளில், கணவனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டாலோ அல்லது அவனால் கைவிடப்பட்டாளோ, அந்தப் பெண் தன் கௌரவத்தையும் அந்தஸ்தையும் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு பொருள் கொடுக்கப்படவேண்டும். இப்படி முன்னேற்பாடகவே பொருள் கொடுக்கப்பட்டு விட்டதனாலே தான், இஸ்லாம் விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் பின்னர் தங்கள் முன்னால் கணவரிடம் - இந்நாள் அந்நியனிடம் கையேந்துபவளாக இருக்கக் கூடாது என்று ஜீவனாம்ச கோரிக்கையை அனுமதிக்கவில்லை.

இப்படியாக பல உரிமைகளும் கொடுக்கப்பட்டுள்ளது பெண்களுக்கு - 1400 வருடங்களுக்கு முன்பாகவே.

ஆனால், இன்று பலரும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றது என்ற வீணான அவதூறுகளையும் பரப்பி வருவதை தவிர்க்க வேண்டும். உங்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகம் இல்லாத பட்சத்தில், தெரிந்தவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் - வீண் கற்பனையைத் தவிருங்கள்.

நன்றி.

7 Comments:

Blogger பாபு said...

நல்ல பதிவு சாரே.!
இங்கு மதங்கள் நோக்கப்படுவதெல்லாம் 'காழ்ப்புணர்வு' கண் கொண்டே என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு பதிவு.நன்றி

5:36 PM  
Blogger நல்லடியார் said...

காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சல் என்பது போல், இஸ்லாத்தை குறை சொல்பவர்கள் இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை என கூக்குரலிடுவார்கள்.

தேவையான பதிவுதான் இது!

6:40 PM  
Blogger நண்பன் said...

நன்றி பாபு, நல்லடியார் அவர்களே...

தொடர்ந்து வாசித்து வாருங்கள்...

9:37 PM  
Blogger அப்துல் குத்தூஸ் said...

நல்ல பதிவு சகோதரரே...

//* தாலி என்ற புனித செண்டிமெண்டெல்லாம் செல்லுபடியாகாது. *//

தாலி என்பதெல்லாம் செண்டிமெண்ட் அல்ல. அதுதான் அவர்களின் அடிமைத் தனத்திற்கு அடையாளம். ஏனென்றால், அவர்களின் பெற்றோர்கள் தான் ''கன்னிகாதானம்'' செய்துவிட்டார்களே? தானம் செய்யும் நிலையில் ஒரு பெண் இருக்கின்றால் என்றால் அவளை அடிமைப் படுத்துவது போன்றுதானே ஆகும்?

5:53 PM  
Blogger aathirai said...

எனக்கு இது ஏற்கெனவே தெரிந்ததுதான். வெள்ளைக்காரர்கள் இந்தியா
வரவில்லையென்றால் இந்து பெண்களின் நிலை பெரிதாக சொல்லிக்கொள்ளும்
அளவு இல்லை. இன்றும் கூட எத்தனை இந்து பெண்கள் விவாகரத்து செய்து
மறுமணம் செய்ய முடியும்?

ஆனால் ஒரு கேள்வி. என்ன் இந்தியாவில் இந்த பழக்கத்தை கடைபிடிக்கவில்லை.
இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எக்கசக்கமாக வரதட்சிணை கொடுக்க
வேண்டும் என்று கேள்விப்படுகிறேன்.

12:38 AM  
Blogger நல்லடியார் said...

//இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு எக்கசக்கமாக வரதட்சிணை கொடுக்க
வேண்டும் என்று கேள்விப்படுகிறேன்//

உண்மைதான் ஆதிரை. இந்தியாவில் மட்டுமல்ல பெரும்பாலான ஆசிய முஸ்லிம் நாடுகளில் இக்கொடுமை. என்னதான் இஸ்லாம் அவர்களின் மதமாக இருந்தாலும் பழக்கதோஷம் விடாது போலும் %)

7:49 AM  
Blogger நண்பன் said...

ஆதிரை,

பெண்களிடமிருந்து வரதட்சணை பெறுவது இந்தியாவில் தான் பெரும்பான்மையான வழக்கமாக இருக்கிறது - இஸ்லாமியர்களிடத்தில். ஆனால், இப்பொழுது பெரும்பாலான இளைஞர்கள் வளைகுடா தொடர்பினால், இந்த பழக்கத்திற்கு மறுப்புச் சொல்லத் தொடங்கி இருக்கின்றனர். அப்பொழுது வரதட்சணை வாங்கச் சொல்லி வற்புறுத்துவது - பெண்கள் தான்.

இது ஒரு சோகமே.... என்ன செய்வது!!

11:21 PM  

Post a Comment

<< Home