படைப்பாளியை மிரட்டும் கோகோ கோலா நிறுவனம்!!!
படைப்பாளியை மிரட்டுகிறார்கள் என்று நம் தமிழ் திரையுலகம் சும்மணாங்காட்டியும் புலம்பித் தள்ளும். ஆனால், உண்மையான படைப்பாளி ஒருத்தரை ஒரு சர்வதேச நிறுவனம் ஒன்று ஏகத்துக்கும் மிரட்டித் தள்ளியிருக்கிறது - இருபது லட்சம் ரூபாய் வரைக்கும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வழக்குப் போடுவதாக சொல்கிறது.
சென்னையில் தான்.
கதை இது தான் -
ஒரு வறண்டு கிடக்கும் அடிபம்பு பக்கத்தில் காலி பிளாஸ்டிக் குடங்கள் வரிசையாக வைக்கப்பட்டு தண்ணீர் வண்டிக்காகக் காத்திருக்க, அந்த சாலையின் அடுத்த பக்கத்தில் பிரம்மாண்டமான விளம்பரத் தட்டி - கோகோ கோலா குடியுங்கள் என்று எழுதப்பட்டு நிற்க - அந்த காட்சி ஒரு சிறப்பான முரண் என்று புகைப்படக்காரருக்குத் தோன்றியிருக்கிறது. உடனே புகைப்படம் எடுத்து விட்டார். அத்தோடு போயிருந்தால் பரவாயில்லையே, உடனே அதை 20 அடிக்கு 30 அடி பிரதி எடுத்து சென்னையின் முக்கிய சாலை ஒன்றில் காட்சிக்கு வைத்து விட்டார்.
இது அவருடைய வழக்கம் தானாம் - கண்ணில் அகப்படும் சமுக பிரச்னைகளைப் புகைப்படமெடுத்து பின்னர் அதை பெரிதாக சாலை ஒன்றில் மக்கள் பார்வைக்கு வைத்து விடுவது.
இந்தக் காட்சி குளிர்பான நிறுவனத்தின் கவனத்திற்கு வந்ததும் எகிறிக் குதிக்க ஆரம்பித்து விட்டார்கள் - தங்கள் பொருளை நையாண்டி செய்கிறார் என்று. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு - 20 லட்ச ரூபாய் வரைக்கும் போடுவோம் என்று மிரட்டல் விட்டிருக்கின்றனர்.
புகைப்படக்காரர் முடியாது என்று மறுத்துவிட்டார். "இது என்னுடைய சுதந்திரத்தில் தலையிடுவதாகும். ஒரு நிஜமான காட்சியை புகைப்படமாக்குவதில் தவறேதுமில்லை. மன்னிப்பு கேட்க முடியாது. வழக்கைச் சந்திக்க தயார்" என்று அறிவித்தும் விட்டார்.
இது இவ்வாறிருக்க, உள்ளூர் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு குழுவினரும் தன்னார்வ தொண்டர்களும் களத்தில் குதித்து விட்டனர். பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் வியாபார முறை கேடுகளைப் பற்றி விமர்சித்ததுடன் நில்லாமல் அந்த நிறுவனத்தால் எத்தகைய பாதிப்புகள் வந்திருக்கின்றன என்றும் பட்டியலிடுகின்றனர். - 'நிலத்தடி நீரை அவர்கள் இரவு பகல் பாராது உறிஞ்சிக் கொள்வதால் அவர்களுடைய பாட்டிலிங் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள வட்டாரங்களில் தண்ணீர் வெகு ஆழத்திற்குப் போய்விடுகிறது. பொதுமக்களுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை' என்பது தான் அந்த புகார்.
புகைப்படமெடுத்தவருக்கோ இந்த பிண்ணனி விவாகாரமெல்லாம் தெரிந்திருக்கவில்லை. 'ஒரு நல்ல உயிர்ப்புள்ள காட்சியாக கண்ணில் தெரிந்த பொழுது அதை புகைப்படமெடுத்தேன். அதன் பிண்ணனியில் உள்ள இத்தனை விவகாரங்களும் நான் அறிந்திருக்கவில்லை' என்கிறார்.
எப்படியோ அறிந்தோ அறியாமலோ அவரால் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வியாபார புரட்டுத் தனங்களை சர்வதேச செய்தியாக்க முடிந்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களைப் பற்றிய செய்திகள் என்றால் உடன் வந்து விடுகிறது - ஏதோ நாம் அவர்களைக் கொடுமைப்படுத்துவது மாதிரி ஒரு பாவனை செய்து விடுகிறார்கள்.
சரி யார் அந்த புகைப்படக்காரர்?
ஷரத் ஹக்சர்.
யார் இவர்?
கோகோ கோலாவின் விளம்பரத்திற்கு புகைப்படமெடுத்து தருபவர் தான்!!!
அடுத்தவர் படைப்பைச் சுட்டுத் திண்ணாலும் தன்னை படைப்பாளி என அங்கீகரிக்க வேணுமென அடம்பிடிக்கும் நம் திரையுலக மேதாவிகள் - ஒரு உண்மையான படைப்பாளிக்கு ஆதரவாக குரல் கொடுக்க முன் வருவார்களா?

8 Comments:
Should Coke decide to pursue this matter, I think that it would become a PR disaster for them. just like what happened to McDonalds in England.
sorry about commenting in English
Good post.
- Suresh Kannan
"ஷரத் ஹக்சர்" உண்மையில் சிறந்த படைப்பாளிதான். அவரின் செய்தியை வெளியிட்ட தாங்களும் அப்படியே.
நன்றி - ஷ்ரேயா, சுரேஷ் கண்ணன், positiverama.
வலைப்பூக்கள் - அனுபவப் பகிர்தலாகவும், தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களுக்கு எதிர்வினை புரிவனவாகவும், இனிமையான நினைவுகளை பதிந்து வைக்கும் தளமாகவும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய அவா.
எத்தனை பேர் படித்தார்கள் என்று முட்டி மோதி கொண்டு நிற்க போவதில்லை. என்னுடைய கருத்துகளை நேர்மையாக, கண்ணியமாக பிரதிபலிக்கக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இந்த வலைப்பூக்கள் பக்கங்களைக் கருதுகிறேன்.
நன்றி, படித்து கருத்து சொன்னமைக்கு...
அன்புடன்
உங்கள் வலைத்தளத்தில் நிறைய செய்திகளை தெரிந்து கொள்ள முடிகிறது.. நன்றி..பகிர்தலுக்கு....
ருமை நண்பரே நன்றிகள் பல இதுப்போன்ற ஒரு விஷயத்தை சபையில் கொண்டு வந்ததற்கு...நல்ல பதிவு
மன்மதன்
உங்களைப் போன்றவர்களெல்லாம் வெறும் அரட்டை அரங்கில் இயங்கிக் கொண்டிருப்பதை விட, இது போன்ற பதிவுகள் செய்வதும், செய்வபவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் இருந்தால் நலம். எல்லோருக்கும்
முத்து
நன்றி
தொடர்ந்து வாசித்து வாருங்கள்
Post a Comment
<< Home