BloggerTopAd:

wow gold|wow powerleveling

நிகழ்வு

செய்திகளும் விமர்சனங்களும்.....

My Photo
Name:
Location: துபாய், அமீரகம், United Arab Emirates

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்

Tuesday, July 19, 2005

வலைப்பூக்களுக்குத் தடை வரலாம்....!!!

வரவர வலைப்பூக்கள் நுகர்வோர் ஆட்சேபிக்கத்தக்க கருத்துகளையும், கண்ணியக்குறைவான பதிவுகளையும், மோசமான எதிர்வினைகளை உருவாக்கும் பதிவுகளையும் தந்து கொண்டிருப்பதால் தீவிர ஆலோசனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது - மோசமான பதிவுகள் தரும் வலைப்பூவர்களை தடை செய்வது குறித்து.

தனி மனிதர்கள் தங்கள் அனுபவங்களையும், தங்களைச் சுற்றி நிகழும் சம்பவங்களை நேர்மையாக வெளிப்படுத்தவும், கதை கவிதை கட்டுரை என்ற இலக்கிய ரசனைகளையும் படைப்புத் திறனை மேலும் மேலும் ஊக்குவிக்கவும் பயன்படட்டுமே என்று உபயோகத்திற்கு அனுமதிக்கப்பட்ட வலைப்பூக்கள் அந்த எல்லைகளை மீறுகிறது.

ஆழ்மனதில் உள்ள வக்கிரங்கள், துவேஷங்கள், பண்பாடற்ற மொழி நடை என ஒரு சமுதாயம் கூடி வாழும் நோக்கிற்குப் பங்கம் விளைவிக்கும் அத்தனை கூறுகளையும் உள்ளடக்கி, சுதந்திரத்தையும் கருத்து கூறும் உரிமையையும் துஷ்பிரயோகம் செய்து வலம் வருவதை வன்மையாகக் கண்டிக்கவும் தண்டிக்கவும், அத்தகைய வலைப்பூக்களை தடுத்து நிறுத்தவும் வேண்டும் என்று இந்த இணையசேவை புரிந்து வரும் அமீரகத்தின் எட்டிசலட் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

ஆம், அரசல்ல - சேவை செய்யும் நிறுவனமே இந்த முடிவை மேற்கொள்கிறது.

ஆச்சரியமான விஷயம் இதுவரையிலும் ஒரு வலைப்பூவைக் கூட அது தடை செய்ததில்லை. முதன்முதலாக அது ஒரு வலைப்பூவை தடை செய்திருக்கிறது. அந்த வலைப்பூவின் பெயர் - சீக்ரெட் துபாய் டயரி. துபாயின் வலைப்பூவர்களிடையே மிகவும் பிரபலமாக விளங்கியது அது. துபாயின் வலைப்பூக்களில் கொஞ்ச நேரம் சுற்றித் திரிந்தால் போதும் - அதன் உண்மை வடிவம் தெரிந்து விடும். 50 சதவிகிதத்திற்கும் மேலாக அங்கு புழங்குவது - கல்லூரி பாடங்கள் தான். மாணவ மாணவியர் தங்கள் கல்லூரி பாடங்களையும் ப்ராஜக்ட் செயல் திட்டங்களையும் வலையில் வைத்திருக்கிறார்கள். மற்ற படிக்கு ஆவேசமான ஆபத்தான கருத்துகள் எதுவும் கிடையாது. அந்த சீக்ரெட் துபாய் டயரி என்ற பூ வந்து சேரும் வரை. அது வந்ததும் துபாய் வலைப்பூவர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது - சடுதியில். காரணம் - தடாலடியாக கருத்துகள் ஆனால் அதே சமயம் அரசிற்கும் ஒத்துப் போகும் வழியாக பதிவுகள். பிறகு அதற்கு ஏன் தடை வந்து விட்டது?


அதில் வந்த ஒரு கவிதை. என்னவென்று பத்திரிக்கைகள் குறிப்பிடவில்லை. ஆனால் அந்த கவிதை பதிவு பெற்றதுமே பலரும் அந்த கவிதையைக் குறித்து ஆட்சேபனை தெரிவிக்க உடனே தடை செய்து விட்டனர். பின்னர் தான் முதல் பத்தியில் குறிப்பிட்டது போல ஆலோசித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதே சமயம் வலைப்பூவின் பயன்பாடு பற்றியும் அறிந்திருப்பதால் எப்படி தரமான வலைப்பூக்களை மட்டுமே பயனில் இருக்கச் செய்வது என்பது தான் இப்பொழுது விவாதமே.

பல துபாய் அன்பர்கள் தடை செய்யப்பட்டது குறித்து ஏமாற்றம் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். கண்டனம் தெரிவிக்க முடியாது. இப்படித் தான் வருத்தம் தெரிவிக்க வேண்டியதிருக்கிறது தங்கள் எதிர்ப்பைக் காட்ட. நாசூக்காக. கூடவே வலைப்பூக்களின் நன்மைகள் குறித்தும் பத்தி பத்தியாக எழுதுகின்றன பத்திரிக்கைகள். அதிலும் குறிப்பாக அமெரிக்கா ஈராக்கில் புகுந்த பொழுது ஒரு இராக்கிய பொறியாளரின் வலைப்பூவை சர்வதேச வலைப்பூவர்கள் அனைவரும் படித்ததை நினைவு கூறுகின்றனர். சலாம் பாக்ஸ் (Salam Pax) என்ற அந்தப் பொறியாளார் பாக்தாத் நகரத்தில் இருந்து எழுதி பதிந்து வைத்த பதிவுகள். அதுபோல சமீபத்தில் லண்டன் குண்டுவெடிப்புகளின் போதும் நேரிடையாகக் கண்டு தங்கள் வலைப்பூவில் அந்த நிகழ்ச்சியைப் பதிந்து வைத்திருந்ததை நானே படித்திருக்கிறேன்.

முதல் தகவல் அறிக்கை என்பது மாதிரி இருக்கிறது. அதுவும் கண்ணால் கண்ட காட்சி அல்லது நேரிடையான அனுபவம் என்பதால் செய்திகள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்கின்றன. அதனால் இந்த வலைப்பூக்களைக் கவனமாகக் கையாள வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்தே ஆலோசித்துக் கொண்டிருக்கின்றன.

அமீரகத்தில் மட்டுமல்ல -

தமிழ்மணத்திலும் இத்தகைய சில குறைந்த பட்ச கட்டுப்பாடுகள் தேவை என்றே தெரிகிறது. இல்லையென்றால் தமிழ் வலைப்பூக்கள் மத, இன, சாதி வெறியர்களின் கூடாரம் என்றே ஆகிவிடும் போலிருக்கிறது.

கனிப்பார்களா?

2 Comments:

Blogger முகமூடி said...

சூப்பர்..... தல சூப்பர்.... நல்ல பதிவு.... ஜமாய்ச்சுட்டீங்க....

இந்த பின்னூட்டத்தின் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது.. அது இங்கே இந்த பதிவில் அதிக பின்னூட்டம் இடுபவர்களுக்கு காயகல்பம், கங்கை தண்ணீர், கசுமாலப்பொடி, கருவாடு ஆகியவை சாஷேக்களில் அடைக்கப்பட்டு இ-மெயிலில் அனுப்பி வைக்கப்படும்...

உங்கள் பதிவை திசை திருப்பும் எண்ணம் இல்லை... இது ஒரு ஜாலி முயற்சி அவ்வளவே... தயவு செய்து இந்த ஒரு முறை பொருத்துக்கோங்க...

9:15 AM  
Blogger நண்பன் said...

நன்றி முகமூடி.

உங்கள் தளத்திற்கு வந்து அடிக்கடி வாசிப்பேன். எல்லாவற்றிற்கும் உடனே பதில் எழுத இயலுவதில்லை.

ஆனாலும், எதற்காக இது இத்தனை பின்னூட்டங்கள் பெற வேண்டும் - அது இத்தனை நட்சத்திரங்களைப் பெற வேண்டும் என்ற ஆவலில் இயங்குகிறீர்கள் என்று புரியவில்லை. இந்த அளவுகடந்த ஆவலே, சமயங்களில் வெறியாக மாறி ஆட்சேபணைக்குரிய பதிவாக மாற்றி விடுகிறது. இத்தகைய போக்கை தவிருங்கள்.

வலைப்பூவை ஒரு டயரியைப் போல் உபயோகப்படுத்துங்கள். உங்கள் சிந்தனைகளை சேமித்து வைக்கவும் அத்தகைய சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளத்தக்கதாக இருக்குமாறும் செய்வதும் அவசியம்.

நாட்கள் செல்ல செல்ல வாசிப்பவர்கள் உங்கள் வலைப்பூவின் தரத்திற்காக வரத்தான் செய்வார்கள்.

(இந்த கருத்து பொதுவாக அனைவருக்கும் தான்...)

நன்றி முகமூடி....

9:56 PM  

Post a Comment

<< Home