BloggerTopAd:

wow gold|wow powerleveling

நிகழ்வு

செய்திகளும் விமர்சனங்களும்.....

My Photo
Name:
Location: துபாய், அமீரகம், United Arab Emirates

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்

Saturday, November 19, 2005

சானியாவை விரட்டிய பத்திரிக்கை நிருபர்கள்....

குஷ்பு பிரச்சினை வந்தாலும் வந்தது -

இப்போ எல்லா பிரபலங்களையும் கருத்து சொல்லு கருத்து சொல்லு என்று விரட்டிக் கொண்டிருக்கின்றனர் பத்திரிக்கையாளர்கள்.

கருத்து சொல்ல விரும்பவில்லை என்றாலும் விடுவதில்லை. கருத்து சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் பத்திரிக்கைகள் பிறரை மதிக்கும் கருத்து சுதந்திரம் இது தான்.

சானியா கேரளாவிற்கு மலபார் கோல்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு brand ambassador ஆகப் போயிடுந்தார். அங்கே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தான் இந்தக் கலாட்டா.

ஏற்கனவே அவர் சொல்லாத கருத்துகளை அவர் சொல்லியதாக அவர் பெயரில் எழுதி, பின்னர் விளக்கமளித்தார். எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் எனக் காத்திருந்த பிஜேபி உடனே கொளுத்திப் போட்டது அவர் உருவத்தை.

ஆடைகள் விஷயத்தில் சானியாவை எதிர்ப்பது என கங்கணம் கட்டிக் கொண்டிருந்த முல்லாக்கள் மீண்டும் ஒருமுறை தங்கள் ஆங்காரத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். ஏதோ சானியா தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருப்பதினால், இவர்களால் ஏதும் செய்ய இயலாது பற்களை நறநறவென கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் இந்நேரம் பத்வா கொடுத்து கண்காணாத இடத்திற்குத் துரத்தியிருப்பார்கள்.

இப்படி பலவகையிலும் கவனச் சிதறலுக்கு உள்ளாக்கி, அவரை தோல்வியடையச் செய்ய பல வகையிலும் மதவாதிகள் முனைப்போடு செயல்படும் பொழுது - இப்பொழுது பத்திரிக்கையாளர்களும் அந்த வரிசையில்.

சந்திப்பு தொடங்கும் பொழுதே - சானியா குறிப்பாகக் கூறிவிட்டார் - தன்னுடைய வரவிற்கு சம்பந்தமற்ற கேள்விகளைத் தவிர்க்கச் சொல்லி.
அதாவது - மலபார் கோல்ட் நிறுவனம் அதனுடைய brand ambassador - இதைத் தவிர வேறு எதுவும் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் பத்திரிக்கைகள் அதைக் கண்டு கொள்ளவேயில்லை. தொடர்ந்து உடலுறவு கொள்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பதைப் பற்றியே கேட்டிருக்கிறார்கள். தொடர்ந்து அவர் மறுக்க - இது மலபார் பூமியாகும் - கருத்து சுதந்திரம் நிறைந்த மண். நீங்கள் கருத்து சொல்லியே ஆக வேண்டுமென்று பிடிவாதம் பிடித்திருக்கிறார்கள். மௌனமும் ஒரு வகைக் கருத்தே என்ற அடிப்படை கூட விளங்காத முட்டாள்கள் - கேரளா ஏதோ கருத்து சுதந்திரத்தை மொத்த குத்தகைக்கு எடுத்துக் கொண்டது போல பேசி - வற்புறுத்த - கோபமுற்ற சானியா வெளியேறிவிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மற்றொருவரான - மோஹன்லால் - சூப்பர்ஸ்டார் எத்தனையோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் - சானியாவின் பின்னாலயே ஓடியிருக்கிறார்கள் - கருத்து சொல் என்று.

எத்தகைய ஒரு வன்முறை இது. ஒருவரை வலிந்து போய் எதையாவது சொல் - நாங்கள் எழுதி சம்பாதிக்க வேண்டும் என வன்முறையில் - கருத்தியல் வன்முறையில் இறங்கிய - இந்த பத்திரிக்கையாளர்கள் தங்கள் உண்மை சொரூபத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

ஒருவரை கருத்து சொல்லி வற்புறுத்துவதே ஒரு வன்முறை தான். இதை பொது வாழ்வில் நேர்மையை எதிர்பார்க்கும் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

7 Comments:

Blogger -L-L-D-a-s-u said...

//ஒருவரை கருத்து சொல்லி வற்புறுத்துவதே ஒரு வன்முறை தான். இதை பொது வாழ்வில் நேர்மையை எதிர்பார்க்கும் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.//

உங்கள் கருத்து மிகவும் சரியானது

3:01 AM  
Blogger Kasi Arumugam said...

//ஒருவரை கருத்து சொல்லி வற்புறுத்துவதே ஒரு வன்முறை தான்.//
சரியா சொன்னீங்க.

4:55 AM  
Blogger ENNAR said...

பிரபலங்களாகிவிட்டால் அந்த தொல்லைதான் தாங்கிக்கொள்ளத்தால் வேண்டும்.

6:22 AM  
Blogger நண்பன் said...

கருத்துக: கூறிய --l-l-d-a-s-u---. காசி, ennar ஆகியவர்களிக்கு நன்றி...

8:28 PM  
Blogger Manmadan said...

பத்திரிக்கைகள் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொண்டுதான் தங்கள் விற்பனையை ஏற்ற வேண்டும் என்ற அவலமான நிலை மாற வேண்டும்..

5:35 PM  
Blogger நண்பன் said...

நன்றி மன்மதன்

பெண்களை விரட்டும் பத்திரிக்கையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் தான் அதிகம்.

இப்பொழுது தான் நாமும் வளர்ந்து கொண்டிருக்கிறேமோ - பிறகு இதில் மட்டும் வளராமல் இருந்தால் எப்படி?

1:37 PM  
Blogger நண்பன் said...

நன்றி மன்மதன்

பெண்களை விரட்டும் பத்திரிக்கையாளர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் தான் அதிகம்.

இப்பொழுது தான் நாமும் வளர்ந்து கொண்டிருக்கிறேமோ - பிறகு இதில் மட்டும் வளராமல் இருந்தால் எப்படி?

1:38 PM  

Post a Comment

<< Home