BloggerTopAd:

wow gold|wow powerleveling

நிகழ்வு

செய்திகளும் விமர்சனங்களும்.....

My Photo
Name:
Location: துபாய், அமீரகம், United Arab Emirates

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்

Tuesday, July 26, 2005

நீங்கள் அழகாக வேண்டுமா?

நீங்கள் அழகாக வேண்டுமா?

டோனி பிளேர் செய்வது போல செய்தால் போயிற்று....

வருடத்திற்கு 1800 பவுண்டுகள் செலவழிக்கிறார் - தன் முகத்தைப் பொலிவுடன் வைத்துக் கொள்ள. செலவழிப்பது தன்னுடைய கையிலிருந்து அல்ல - மக்கள் கொடுக்கும் வரிப்பணத்திலிருந்து தான்.

ஒரு ஆங்கிலேயப் பெண்மணி வருடத்திற்கு எத்தனை செலவழிக்கிறார் தெரியுமா? -சராசரியாக 195 பவுண்டுகள் -ஒரு பெண்ணை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகம் செலவு செய்கிறார் தன் அலங்காரத்திற்காக.

இவர் சமீபத்தில் கலந்து கொண்ட G8 மாநாட்டின் முக்கிய தீர்மானம் - ஆப்பிரிக்காவில் வறுமையை ஒழிப்பது என்பது. சரி வறுமை என்றால் என்ன என்று தெரியுமா? ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு டாலரை விட குறைவாக சம்பாத்தியம் செய்தால் அந்த நபர் வறுமைக் கோட்டிற்குக் கீழாக இருக்கிறார் என்று அர்த்தமாம். நமது நாட்டில் இன்னமும் அதன் அளவு குறைவு அதாவது மாதம் ரூ 500/-க்கு குறைவான வருமானம் என்றால் வறுமைக் கோட்டிற்குக் கீழ். வலைப்பூக்களிலே படித்தது தான்.


இப்பொழுது கணக்குப் போட்டுப் பாருங்கள் - ஒரு பவுண்டு - கிட்டத்தட்ட ரூ.70/- என்று வைத்துக் கொள்ளுங்கள்.

1800 x 70 = 126000.

இதை 500 ஆல் வகுத்துப் பாருங்கள் - 252.

அதாவது அண்ணன் பிளேர் அரிதாரம் பூச செலவழிக்கும் பணத்தில் 252 நபர்களை ஒரு மாதத்திற்கு வறுமைக் கோட்டிற்கு மேலே கொண்டு வந்திருக்கலாம். அல்லது 21 நபர்களை ஒரு வருடம் முழுமைக்கும் வறுமை கோட்டிற்கு மேலாக வைத்திருக்கலாம்.

இந்தத் தலைவர்களெல்லாம் கூடிப்பேசி ஆப்பிரிக்க நாடுகளின் வறுமையை ஒழிக்கப் போகிறார்கள் என்று பேசுவது எத்தனை நகைப்புக்கு இடமளிக்கிறது தெரியுமா?

ஏழ்மையை எள்ளி நகையாடும் இந்த மமதை என்று ஒழியுமோ, இறைவா!!!!

4 Comments:

Blogger பரணீ said...

நண்பன், அவரு செலவு செஞ்சது வருடத்திற்கு அல்ல.
Prime Minister Tony Blair has spent more than £1,800 of taxpayers' money on cosmetics and make-up artists since coming into office, it has emerged.

http://news.bbc.co.uk/1/hi/uk_politics/4711689.stm

2:34 AM  
Blogger நண்பன் said...

அப்படியானால், இந்தச் செலவுகள் எல்லாம் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமேயாகும் - அவர் இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னமும் ஒரு வருடம் ஆகவில்லையே!!!

10:40 PM  
Blogger பரணீ said...

நண்பன் நீங்க அந்த சுட்டியை சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன்.

Between 1999 and 2005 Downing Street paid £1,050.22 for cosmetics for Mr Blair's media appearances.

Another £791.20 was spent over the past two years on make-up artists.

http://news.bbc.co.uk/1/hi/uk_politics/4711689.stm

5:39 PM  
Blogger நண்பன் said...

நான் படித்த செய்திப்பத்திரிக்கையில் கொடுத்த செய்தி தான் அது. மேலும் பெண்களின் வருட சராசரியுடன் சம்பந்தப் படுத்தி இருந்ததால் அதுவும் வருடாந்திர செலவாக இருக்கக் கூடும் என்று கருதுவதற்குத் தான் இடம் கொடுத்தது.

நீங்கள் கொடுத்த சுட்டியை இனிதான் படிக்க வேண்டும்.

நன்றி - பரணீ.

11:06 PM  

Post a Comment

<< Home