அமெரிகாவின் கடைவாயில் ரத்தம் ஒழுகும் ஜனநாயகம்...
கசிந்து வந்த அந்த செய்தியைப் பற்றி அதில் சம்பந்தப்பட்ட யாருமே கருத்து சொல்லவில்லை.
வெள்ளை மாளிகைக்கு அது ஒவ்வாத கருத்து. அந்தச் செய்தியைப் பற்றி கருத்து சொல்லி, அதற்கு ஒரு மரியாதை உண்டாக்க விரும்பவில்லை என்று சொல்லிக் கொள்கிறது.
டௌனிங் தெருவோ என்றைக்குமே கசிந்து வரும் செய்திகளுக்குப் பதில் சொல்வதில்லை.
குறி வைக்கப்பட்ட அல்-ஜஸீரா தொலைக்காட்சி செய்தி நிறுவனமோ உடனடியாக கருத்து ஏதும் சொல்லவிரும்பவில்லை.
எந்த செய்தி அது?
ஜார்ஜ் புஷ் - பிளேரிடம் விவாதிக்கிறார் - அல்ஜஸீராவின் தோஹா, கத்தார் அலுவலகத்தின் மீது குண்டு வீசி தகர்க்க வேண்டுமென்று வாதிடுகிறார்.
ஜனநாயகத்தையே கண்டுபிடித்தவர்கள் என குதித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் நம்பர்-1 தான் இப்படி பேசுகிறது. விடுதலையே எமது மூச்சு என்று குறியீடாக விடுதலை தேவி சிலையையும் (பிரான்சு நாடு கொடுத்த அன்பளிப்பு) நிறுவி வைத்திருக்கிறது.
தன் நாட்டுப் பத்திரிக்கைகளைக் கொண்டு உலகெங்கும் பிரசாரம் செய்கிறது - விற்க முயல்கிறது - தன்னிடம் இருக்கும் உயர்தர ஜனநாயகத்தை - ஏதோ கடைகளில் கிடைக்கும் பிரியாணி பொட்டலம் போல உலகெங்கும் விற்றுத்தீர்த்து விடலாம் என்ற கணிப்பு...
லண்டனில் கசிந்து அதை மறுக்கத் திராணியற்று லண்டனும் வாஷிங்டனும் மௌனம் சாதிக்க - அவர்களது முகத்திரை கிழிந்து கொண்டிருக்கிறது இந்த செய்தினால்.
இறுதியாக பிளேர் - better of the two evils - புஷ்ஷை அப்படியெல்லாம் செய்யக்கூடாது செல்லம்னு சொல்லி சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு 'மக்கு'த் தலைவரை எப்படித்தான் தேர்ந்தெடுத்து தொலைத்தார்களோ இந்த அமெரிக்க மூடர்கள் தெரியவில்லை.
புஷ்ஷின் ஆங்காரம் என்ன?
அல் ஜஸீரா தொடர்ந்து பொது மக்கள் அவதியுறுவதைத் தன் தொலைக்காட்சிகளில் காட்டிக்கொண்டிருந்தது - அதாவது உண்மையை. ஜனநாயகம் பேணும் அமெரிக்க, பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளோ மக்களுக்கு எந்த பங்கமுமில்லை - தீவிரவாதிகளை மட்டும் தான் தீர்த்துக் கட்டுகிறோம் என்ற sweet nothingஐ காலை, மாலை உணவாகத் தந்து கொண்டிருந்த நேரம் அல்-ஜஸீரா உண்மைகளைப் போட்டு உடைத்து அவர்கள் எந்த உணவையும் நிம்மதியாக உண்ணாமல் செய்து விட்டது.
விளைவு? புஷ்ஷின் ரேட்டிங் அதலபாதாளத்தில் வீழ்ந்தது. மதிப்பிழக்கத் தொடங்கினார். ஒரு பொய் சொல்லி போரைத் தொடங்கினார். பின்னர் அதை மறைக்க வரிசையாகப் பொய்கள் - கடைசியாக தாங்கள் தூக்கிப் பிடித்த ஜனநாயக மரபுகளையே மீறி செயல்பட துணிந்தார்.
இப்பொழுது மக்கள் கேட்கும் கேள்வி - அல்ஜஸீரா தலைமையகம் தாக்கப்படவில்லை. சரிதான்.
ஆனால் அல்ஜஸீராவின் பாக்தாத் அலுவலகத்தின் மீது குண்டு விழுந்தது. சில பத்திரிக்கையாளார்கள் இறந்தனர். அப்பொழுது, அதை 'No Collateral Damages' என சொல்லி - ஏதோ அறியா பிழை என எல்லோரையும் நம்ப வைத்தார்கள். இராக்கின் யுத்த களத்தில் மொத்தம் 74 பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், உதவியாளர்கள் இறந்திருக்கின்றனர் - பணியிலிருக்கும் பொழுது.
அமெரிக்கா - இந்தியாவை Thirld World என்கிறது.
ஆனால் என்னைத் தரம்பிரிக்கச் சொன்னால்
First World -
Second World
Third World
Dirty World - USA & England.
மற்ற மூன்றிலும் யார் வேண்டுமானாலும் எந்த நிலைமையிலும் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.....
வெள்ளை மாளிகைக்கு அது ஒவ்வாத கருத்து. அந்தச் செய்தியைப் பற்றி கருத்து சொல்லி, அதற்கு ஒரு மரியாதை உண்டாக்க விரும்பவில்லை என்று சொல்லிக் கொள்கிறது.
டௌனிங் தெருவோ என்றைக்குமே கசிந்து வரும் செய்திகளுக்குப் பதில் சொல்வதில்லை.
குறி வைக்கப்பட்ட அல்-ஜஸீரா தொலைக்காட்சி செய்தி நிறுவனமோ உடனடியாக கருத்து ஏதும் சொல்லவிரும்பவில்லை.
எந்த செய்தி அது?
ஜார்ஜ் புஷ் - பிளேரிடம் விவாதிக்கிறார் - அல்ஜஸீராவின் தோஹா, கத்தார் அலுவலகத்தின் மீது குண்டு வீசி தகர்க்க வேண்டுமென்று வாதிடுகிறார்.
ஜனநாயகத்தையே கண்டுபிடித்தவர்கள் என குதித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் நம்பர்-1 தான் இப்படி பேசுகிறது. விடுதலையே எமது மூச்சு என்று குறியீடாக விடுதலை தேவி சிலையையும் (பிரான்சு நாடு கொடுத்த அன்பளிப்பு) நிறுவி வைத்திருக்கிறது.
தன் நாட்டுப் பத்திரிக்கைகளைக் கொண்டு உலகெங்கும் பிரசாரம் செய்கிறது - விற்க முயல்கிறது - தன்னிடம் இருக்கும் உயர்தர ஜனநாயகத்தை - ஏதோ கடைகளில் கிடைக்கும் பிரியாணி பொட்டலம் போல உலகெங்கும் விற்றுத்தீர்த்து விடலாம் என்ற கணிப்பு...
லண்டனில் கசிந்து அதை மறுக்கத் திராணியற்று லண்டனும் வாஷிங்டனும் மௌனம் சாதிக்க - அவர்களது முகத்திரை கிழிந்து கொண்டிருக்கிறது இந்த செய்தினால்.
இறுதியாக பிளேர் - better of the two evils - புஷ்ஷை அப்படியெல்லாம் செய்யக்கூடாது செல்லம்னு சொல்லி சமாதானப்படுத்தி வைத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட ஒரு 'மக்கு'த் தலைவரை எப்படித்தான் தேர்ந்தெடுத்து தொலைத்தார்களோ இந்த அமெரிக்க மூடர்கள் தெரியவில்லை.
புஷ்ஷின் ஆங்காரம் என்ன?
அல் ஜஸீரா தொடர்ந்து பொது மக்கள் அவதியுறுவதைத் தன் தொலைக்காட்சிகளில் காட்டிக்கொண்டிருந்தது - அதாவது உண்மையை. ஜனநாயகம் பேணும் அமெரிக்க, பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளோ மக்களுக்கு எந்த பங்கமுமில்லை - தீவிரவாதிகளை மட்டும் தான் தீர்த்துக் கட்டுகிறோம் என்ற sweet nothingஐ காலை, மாலை உணவாகத் தந்து கொண்டிருந்த நேரம் அல்-ஜஸீரா உண்மைகளைப் போட்டு உடைத்து அவர்கள் எந்த உணவையும் நிம்மதியாக உண்ணாமல் செய்து விட்டது.
விளைவு? புஷ்ஷின் ரேட்டிங் அதலபாதாளத்தில் வீழ்ந்தது. மதிப்பிழக்கத் தொடங்கினார். ஒரு பொய் சொல்லி போரைத் தொடங்கினார். பின்னர் அதை மறைக்க வரிசையாகப் பொய்கள் - கடைசியாக தாங்கள் தூக்கிப் பிடித்த ஜனநாயக மரபுகளையே மீறி செயல்பட துணிந்தார்.
இப்பொழுது மக்கள் கேட்கும் கேள்வி - அல்ஜஸீரா தலைமையகம் தாக்கப்படவில்லை. சரிதான்.
ஆனால் அல்ஜஸீராவின் பாக்தாத் அலுவலகத்தின் மீது குண்டு விழுந்தது. சில பத்திரிக்கையாளார்கள் இறந்தனர். அப்பொழுது, அதை 'No Collateral Damages' என சொல்லி - ஏதோ அறியா பிழை என எல்லோரையும் நம்ப வைத்தார்கள். இராக்கின் யுத்த களத்தில் மொத்தம் 74 பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள், உதவியாளர்கள் இறந்திருக்கின்றனர் - பணியிலிருக்கும் பொழுது.
அமெரிக்கா - இந்தியாவை Thirld World என்கிறது.
ஆனால் என்னைத் தரம்பிரிக்கச் சொன்னால்
First World -
Second World
Third World
Dirty World - USA & England.
மற்ற மூன்றிலும் யார் வேண்டுமானாலும் எந்த நிலைமையிலும் வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.....
9 Comments:
அபு கிரைப்:
சித்திரவதையின் நோக்கம்!
அபு கிரைப் சிறைச்சாலையில் இராக் மக்கள் மீது அமெரிக்க துருப்புக்கள் நடத்திய வக்கிரமான சித்திரவகைகள் குறித்த புகைப்படங்களும் ஒளிநாடாக்களும் சென்ற மே மாதம் முதன் முதலாகச் செய்தி ஊடகங்களின் வெளிவந்தன. உலகெங்கும் எழுந்த கன்டனங்களின் விளைவாக இந்த ஒளிநாடாக்களையும் புகைப்படங்களையும் பார்ப்பதற்க்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் அனுமதித்தது புஸ் அரசு. ஓரு கண்துடைப்பு விசாரளையும் நடக்கின்றது.
இன்னும் வெளியிடப்படாத படங்களில் மிகக் கொடூரமான வன்புணர்ச்சிக் காட்சிகளும் இராக்கியச் சிறுவர்களுடனான ஓரினச் சேர்க்கைக் காட்சிகளும் உள்ளதாகக் கூறுகின்றது நியூஸ்வீக் வார ஏடு.
ஷஷதுப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்படும் இராக் பெண்கள், நேரடியான உடலுறவுக்காட்சிகள் ஆகியவற்றைக் கண்டு நான் திகிலில் உறைந்து போனேன்.|| என்றார் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்டின் டி.மிகான். ஷஷநரகத்தின் படுகுழிக்குள் தள்ளப்படுவது போல இருந்தது. ஆனால் இது நாம் உருவாக்கியிருக்கும் நரகம்|| என்றார் செனட்டர் ரிச்சர்டு ஜே. டர்பின்.
இவ்விதழில் வெளியிடப்பட்டிருப்பவை அமெரிக்க அரசால் இருட்டடிப்பு செய்யப்பட்ட படங்கள். இவற்றை வெளியிட்டுயிருக்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்துச் சீர்குலைக்கின்றது (ர்யஉமiபெ) புஸ் அரசின் கூலிப்படை. அமெரிக்காவின் மீது வளைகுடா மக்களுக்கு வெறுப்பைத் தோற்றுவிற்பதற்க்காகவே பரப்பப்படும் போலிப் புகைப்படங்கள் இவை|| என்று கேலிக்குரிய ஒரு பொய்யையும் பரப்பி வருகின்றது புஸ்அரசு.
பொய், புனைசுருட்டுக்கள் அனைத்துக்குமான அறிவுச்சொத்துடமையைத் தனது மரபு உரிமையாக வரித்துக்கொண்டுள்ள அமெரிக்க அரசுக்கு நாம் விளக்கம் தரத்தேவையில்லை. நம்மிடையே பெருகிவரும் அமெரிக்க மோகிகளுக்கும் அமெரிக்க தாசர்களுக்கும் தான் விளக்கம் தேவைபடுகின்றது. அவர்களுது தடித்த தோலையும், இலவம் பஞ்சு மூளையையும் ஊடுருவும் வகையிலான விளக்கம் தேவைப்படுகின்றது. எனவேதான் இப்படங்களை வெளியிடுகின்றோம். சொற்கள் தீண்டமுடியாத சொறனையை இந்த விகாரமான படங்கள் தீண்டக் கூடும் என்பதால் வெளியிடுகின்றோம்.
இந்தப் படங்களைக் கண்டு ஒழுக்கவாதக் கண்ணோட்டத்தில் யாரையும் முகம் சுளிக்கக் கூடுமெனில் அத்தகையோருக்கு தமது போராட்டத்தின் வாயிலாக மணிப்பூர் பெண்கள் ஏற்கனவே பதிலளித்து விட்டார்கள். இராணுவத்துக்கு மட்டுமல்ல, பெண்ணை உடலாக மட்டுமே உணர்ந்து கிளர்ச்சி கொள்ளும் ஒவ்வொரு ஆண் மனதுக்கும் வழங்கப்பட்ட செருப்படி அந்தப்போராட்டம். இந்தப் புகைப்படங்களும் தான்.
ஓரு பெண்ணின் மீதும் கைதிகளின் மீதும் ஏவப்படும் பலியல் வன்முறையைமட்டும் சித்தரிப்பவையல்ல இந்தப்படங்கள். ஒரு தேசம் அதன் சுதந்திரம், இறையாண்மை, கலாச்சாரம் ஆகிய அனைத்தின் மீதும் ஏகாதிபத்தியங்கள் நிகழ்த்தும் கற்பழிப்பின் உருவகம் இது. எண்ணைக்கான யுத்தம், டொலருக்கான யுத்தம் என்றுமட்டும் இந்த ஆக்கிரமிப்பை புரிந்து கொள்ளும் பொருளாதார சவங்களுக்கு, உயிரின் துடிப்பை உணர்த்தும் படங்கள் இவை. ஷஷஇந்தப் பாவத்தின் சம்பளம் தான் நீங்கள் அடைய விரும்பும் தங்கம்|| என்ற உண்மையை அமெரிக்காவில் கரைசேரத்துடிக்கும் ஒவ்வொரு மைதாசுக்கும் உணர்த்தும் படங்கள் இவை.
தம்மை நாகரிக உலகம் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு ஓநாய்கூட்டம், மனித நாகரிகத்தின் உண்மையான தொட்டிலின் மீதும், அதன் குழந்தைகளின் மீதும்
நாம் பேசும் மொழியை, எழுத்தை, சுதந்திரம் எனும் சொல்லை முதன்முதலில் உச்சரித்த அந்த மழலைகள் மீதும்
நடத்தும் தாக்குதல் - உன் மீதும் என் மீதும் நடத்தப்படும் தாக்குதல்தான் என்பதை உறைக்கச் செய்வதற்க்கான படங்கள் இவை.
அமெரிக்கா தொடுத்திருக்கும் ஆக்கிரமிப்பு யுத்தத்தின் கொடூரத்தை, காலனியாதிக்கத்தின் அநீதியை நிருபிப்பதற்கு இந்தப்படங்கள் தேவையில்லை. ஆனால் தோற்கடிக்கப்பட்ட மக்களின் கையில் வெற்றியாளர்கள் படும் பாட்டை, உடலால் அடக்கப்பட்டாலும் உள்ளத்தால் பணிய மறுக்கும் ஒரு தேசத்தை, அத்தேசத்தின் ஆன்மாவை, அடக்கியாள முடியாமல் வெறி கொண்டு துடிக்கும் அமெரிக்க வல்லரசின் கையாலாகாத்தனத்தை நிருபிப்பதற்க்கு இந்தப்படங்கள் தேவை.
அமெரிக்க கொடும்கொலர்களின் பிடியிலிருந்து விடுபடத்துடிக்கும் இந்தச் சுதந்திரப் பறவைகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் தகுதி நமக்கில்லை. நம் கையறு நிலைக்காக அவர்கள் வேண்டுமானால் நம்மீது அனுதாபப் படலாம்.
அமெரிக்க ஓநாய்களின் கோரப்பிடியில் இந்த உலகம் சிக்கி விடாமல் தன்னந்தனியே தடுத்து நின்று கொண்டிருக்கும் இராக் மக்களின் வீரத்தைப் போற்றுவோம்.
அபு கிரைப் சிறைச்சாலையில் நடைபெறும் கொடுமைகளை முதன்முதலில் தெரிவித்தவை மே மாதம் வெளியான புகைப்படங்கள் அல்ல. டிசம்பர் 2003-இல் சிறையிலிருந்து கடத்தப்பட்ட நூர் என்ற இராக்கியப் பெண்ணின் கடிதம். (கார்டியன், மே--20-2004)
ஷஷஒவ்வொரு நாளும் ஆண் கைதிகள் மற்றும் அமெரிக்க இராணுவத்தினரின் முன் எங்களை அம்மணமாக நடக்க வைக்கின்றார்கள். உங்களுடைய தாயோ, சகோரரியோ இந்தச் சிறையில் இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் அமெரிக்கச் சிப்பாய்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு. கருத்தரித்திருக்கிறார்கள் என்பது உறுதி. தயவு செய்து எங்கள் மீது குண்டு வீசுங்கள். இந்தச் சிறையின் மீது அணுக்குண்டைக் கூட வீசுங்கள். எங்களைக் கொன்று விடுங்கள்|| இவ்வாறு அமெரிக்க இராணுவத்தை எதிர்த்துப் போராடும் இராக் போராளிகளிடம் மன்றாடுகின்றது அந்தக் கடிதம். (கிறிஸ்டியன் சைன்ஸ் மானிட்டர்)
இக்கடிதம் குறித்த செய்தி இராக் மக்களிடையே பரவத் தொடங்கியவுடனே இதனைப் பொய்யென்று நிராகரித்தது அமெரிக்க அரசு. ஆனால் அமெரிக்க இராணுவம் அமைத்த இரகசிய விசாரணைக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் அந்தோணி தகுபாவின் அறிக்கையோ அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளவையனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மை என்கின்றது.
ஓபெக் (ழிநஉ) தலைமையகத்தின் எரிபொருள் ஆய்வுத்துறைத் தலைவராக இருந்த சதல்லா அல்பாத்திகல்;ப் நியூஸ் (புரடை நெறள) எனும் பிரபல பத்திரிகையில் எழுதுகிறார்.
ஷஷஇதுநாள் வரை நான் எண்ணெய் வணிகம் தொடர்பான கட்டுரைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன். இதோ, இதை எழுதும்போதே நான் அழுகின்றேன்... என் தேசத்தில் நடந்ததற்காகவும், நடந்துகொண்டுருப்பதற்காகவும் மட்டுமல்ல, அவுகிரைப் கொடூரங்கள் பற்றிப் பலவாதங்கள் முன்பே கேள்விப்பட்ட போதும், அதை நம்ப மறுத்தேனே, அதற்க்காக அழுகிறேன்.||
ஷஷநான் மேல்நாடுகளில் படித்தவன்; வாழ்கையின் பெரும்பகுதியை அங்கேயே கழித்தவன்;. ஷநாகரிகம் பொருந்திய மேலைநாட்டு அரசுகள் இவ்வாறெல்லாம் நடப்பதை அனுமதிக்கவே மாட்டார்கள்| என்று இத்தனைக் காலம் நம்பியிருந்தேனே, அதற்க்காக அழுகிறேன்;||.
ஷஷஎங்களைக் கொன்று விடுங்கள்| என்று அபு கிரைப் சிறைச்சாலையின் பெண் கைதிகள் அனுப்பும் கடிதங்களைப் பற்றி நான் கடந்த மார்ச் மாதமே அறிந்தேன். அப்போதும் அதை நான் நம்ப மறுத்தேன். அது உண்மையல்ல என்பதனால் அல்ல, அந்த உண்மை தோற்றுவிக்கும் மன உளைச்சலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்க்காக அதை நம்பமறுத்தேன்.||
ஷஷஅடுத்த சில நாட்களில் பாக்தாத்திருந்து வந்த என் நண்பர் சொன்னார். ஷபக்கத்து வீட்டுப் பெண்கள் இருவர் சில வாரங்கள் சிறையிலிருந்தனர். விடுவிக்கப்பட்டபின் அவர்களைச் சந்தித்து என்ன நடந்ததுதென்று அறிய முனைந்தேன். கண்ணீர் தான் அவர்கள் தந்த விடை நீண்ட நேரத்திற்குப் பின் விசும்பியபடியே ஒரு பெண் சொன்னால், என்னைத் தொட்டுவிட்டார்கள்.||
ஷஷஇப்போதும் நான் நம்பமறுக்கிறேன். சில நேரங்களில் உண்மை எனத் தெரிந்தும் அதை நம்புவதற்க்கு நாம் விரும்புவதில்லை அல்லவா? அப்படித்தான் நானும் இந்த உண்மையை நம்ப மறுக்கிறேன்.||
நாதியா இப்போது விடுவிக்கப் பட்டுவிட்டாள். ஆனால் தனது கன்னிமை சூறையாடப்பட்ட அந்த இருண்ட நாட்களின் கொடிய நினைவுகளிலிருந்து அவள் விடுபடவே முடியாது. லண்டணிலிருந்து வெளிவரும் அல்கியாத் நாளேட்டிற்கு அவள் அளித்த பேட்டியிலிருந்து:
'ஆயுதங்களைத் தேடுவதாக கூறி அமெரிக்கத் துருப்புக்கள் என் வீட்டில் நுழைந்தார்கள். என்னைத் தூக்கிச்சென்றார்கள். சிறையில் வைத்து என்னைத் துகிலுரிந்து நிர்வாணமாக்கி ஆணும் பெண்ணுமாக அமெரிக்கச் சிப்பாய்கள் சுற்றி நின்று கொண்டார்கள். பெண் ஆயுத வியாபாரிகளும் இராக்கில் உண்டு என்று இப்போதுதான் கேள்விபடுகிறேன்|| என்று நக்கலடித்தாள் ஒரு பெண் சிப்பாய் நான் மறுத்துப் பேச முற்பட்டவுடன் தாக்கத் தொடங்கினாள். நான் செயலிழந்தேன். ஒரு குவளை தண்ணீர் கொடுத்தாள். ஓரு மிடறு விழுங்கியவுடனே சுயநினைவை இழந்தேன். நினைவு திரும்பிய போது நான் வண்புனர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை உணர்ந்தேன்||.
ஷஷஅடுத்த சில நாட்களில் 5 சிப்பாய்கள் கும்பலாக வந்தார்கள். காமவெறியைத் தூண்டும் இரைச்சலான இசையை அலரவிட்டு அதனை ரசித்தபடியே மாறிமாறி என்னை வேட்டையாடினார்கள்.||
'ஒரு மாதத்திற்குப் பின் ஒரு சிப்பாய் வந்தான் என்னைக் குளிக்கச் சொன்னான். குளித்துக் கொண்டிருக்கும்போதே குளியலறைக் கதவை உதைத்துத் திறந்தான். நான் அவனை அறைந்தேன். அவனோ மிருகங்கள் புணர்வதைப் போல என்னைப் புணர்ந்தான். இன்னும் இரண்டு பேரையும் என் மீது ஏவிட்டான்.||
'நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரு பெண் சிப்பாய் நான்கு ஆண்களுடன் வந்தாள். ஆவர்கள் கையில் டிஜிடல் கமெரா. ஏன்னை அம்மணமாக்கி என் மீது ஒரு ஆணைப் போல அவள் நடந்து கொண்டாள். மற்ற ஆண்கள் கைகெட்டிச் சிரித்தபடியே இதனைப்படமெடுத்தனர். அவளிடமிருந்து என்னைப் விடுவித்துக் கொள்ள போராடினேன். அவள் ஆத்திரமடைந்து என்னை நோக்கி நான்கு முறை துப்பாகியால் சுட்டாள். தோட்டாக்கள் தலையை உரசிச் சென்றதால் நான் திகிலில் உறைந்தேன். உடனே நான்கு ஆண்களும் என்மீது விழுந்து குதறத் தொடங்கினார்கள். நான் நினைவிழந்தேன்.
'நினைவு திரும்பிக் கண்விழித்தபோது என்னை அவர்கள் குதறிய காட்சி வீடியோத் திரையில் ஓடிக் கொண்டிருதது. கண்ணை மூடிக்கொண்டேன். எங்களை மகிழ்விக்கத்தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்! கண்ணைத் திற, பார், பார் என்று அவள் மிரட்டினாள்.||
'ஆறு மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டேன். ஒரு நெடுஞ்சாலையில் பொட்டல் வெளியில் என்னை இறக்கி விட்டு கையில் கொஞ்சம் காசு கொடுத்து ஷபோ, போய் புதிய வாழ்க்கையைத் தொடங்கிக் கொள்| என்று விரட்டிவிட்டான் ஒரு அமெரிக்கச் சிப்பாய்.||
நாதியா என்ற புனைபெயரில் வாழும் இந்தப் பெண் அவமானத்தால் வீடு திரும்பவில்லை. சொந்த ஊரை விட்டு இராக்கின் வேறொரு மூலையில் வீட்டு வேலை செய்து வயிற்றைக் கழுவுகிறாள்.
நாதியா ஒரு அதிசயம். அபு கிரைப் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் பெண்களில் பலர் அவமானத்தால் தற்கொலை செய்து கொள்கின்றனர். கருத்தரித்த பெண்களோ அமெரிக்க நாய்கள் கொடுத்த பிள்ளையைச் சுமக்க மறுத்துத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத குடும்பத்தினரே பெண்ணைக் கொல்ல முயல்கின்றனர். அதைத் தடுத்து நிறுத்திய ஒரு சம்பவத்தை நினைவு கூறுகின்றார் பாக்தாத் பல்கலைக் கழகத்தின் பேராசிரியையும், அம்னாஸ்டி இன்டர்நேசனனின் பிரதிநிதியுமான நுவாய்ய்மி.
'எங்களைக் குண்டு வீசிக் கொன்றுவிடுங்கள்|| என்று கடிதம் அனுப்பி அபுகிரைப் சிறையின் கொடுமைகளை உலகிற்கு அறிவித்த பெண் பெண் யார் என்பதைக் கண்டுபிடித்து, பாக்தாத் நகரில் அந்தப் பெண்ணின் வீட்டைத் தேடிச் சென்றார் பேராசிரியை நுவாய்மி. நூர் என்ற அந்தப் பெண்ணின் குடும்பமே ஊரை விட்டுப்போய்விட்டது. 'அவள் உயிருன் இருக்க வாய்பில்லை|| என்கின்றார் நுவாய்மி.
ஆஸ்வாய் இருபது வயதுப் பெண் திடீர்யென்று ஒருநாள் அவளுடைய தாய் காணாமல் போய்விட்டால். ஓருவேளை கைது செய்யப்பட்டிருப்பாளோ என்று அஞ்சி அபு கிரைப் சிறைக்கு நடையாய் நடக்கிறாள் ஆஸ்வாய். 'ஆப்படியாரும் இங்கே இல்லை|| என்று கூறி விரட்டுகிறார்கள் அமெரிக்க சிறையதிகாரிகள்.
ஆபுகிரைப் சிறையின் வீடியோ காட்சிகள் என்ற குறுந்தகடு மர்மமான முறையில் பாக்தாக்கில் புழங்கக் தொடங்குகிறது. அதில் தன்னுடைய தாயின் படத்தை பார்த்த ஆஸ்வாய் 'இது உண்மையாய் இருக்க முடியாது|| என்று கதறுகிறாள்.
அடுத்த சில நாட்களில் செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து வந்த கடிதம். 'உங்கள் தாய் அபுகிரைப் சிறையில் இருக்கிறார்|| என்று தெரிகிக்கிறது. என் அம்மாவுக்கு எதுவும் நேராமல் கூட இருக்கலாம். ஆனால் யார் நம்புவார்கள்? என்று கூறி விசும்புகின்றாள் ஆஸ்வாய்.
அபு கிரைப் படங்கள் வெளிவந்ததையொட்டி அமெரிக்கக் கட்சிகளும் ஊடகங்களும் வெளியிட்டு வரும் அதிர்ச்சியும் கண்டனங்களும் அயோக்கியதனமான மோசடிகள் என்கின்றார் பிரண்ட் லைன் இதழின் அமெரிக்கச் செய்தியாளர் விஜய் பிரசாத்.
'கலிபோர்னியா சிறையில் கைதிகளை கிளாடியேட்டர் பாணியில் ரத்தம் சொட்டச் சொட்ட மோதவிட்டு இந்த விளையாட்டைக் கண்டு களித்தனர் சிறையதிகாரிகள். விசாரணைக்குப் பின் யூன் 2001-இல் இந்த அதிகாரிகளைக் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்தது அரசு.||
'பெண்கள் சிறையில் 16 பென் கைதிகளை வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய குற்றத்துக்காக 11அதிகாரிகள் 1999இல் தண்டிக்கப்படனர்.||
'இளம் பெண்களுக்கான சீர்திருத்தப் பள்ளியொன்றில், அப்பெண்களை நிர்வாணமாக்கி கைகளை அகலவிரித்து விலங்கிட்டு, உடலெங்கும் மிளகாய் பொடியைத் தடவி ஒவ்வொருநாளும் 23மணிநேரம் தனிமைச்சிறையில் வைத்தனர் சிறையதிகாரிகள்|| என்று அமெரிக்கச் சிறைகளின் யோக்கியதையைப் பட்டியலிடும் பிரசாத், 'அமெரிக்கச் சிறைகளின் நீட்சிதான் அபுகிரைப். இது விதிவிலக்கல்ல|| என்றுநிறுவுகிறார்.
தன் சொந்த மக்களையே விலங்குகள் போல நடத்தும் அரசு, ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தை எப்படி நடத்தும் என்பதை புரிந்து கொள்ள ஆதாரம் எதுவும் தேவையில்லை.
'எங்களை மகிழ்விப்பதற்க்காகதான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள்|| என்று நாதியாவிடம் சொன்னாளே அந்தப் பெண் சிப்பாய், அது அளுடைய தனிப்பட்ட கருத்தல்ல, அமெரிக்க அரசின் கொள்கை. தாங்கள் சுகிக்கவும், சூறையாடவும், கசக்கிப் பிழியவும், பருகவும் தான் இந்த உலகம் தேவனால் உண்டுபண்ணப்படிருக்கிறது என்பதே அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகளின் கருத்து.
சமூக உணர்வற்ற தனிநபர்களாய் நொறுக்கிச் சிதறடிக்கப்பட்ட அந்தச் சமூகமோ 'தானும் தன் இன்பமுமே ஜீவன், அதை வழங்கவல்ல டாலரே சத்தியம்|| என்று நம்புகிறது. காதல், அன்பு, பாசம், நட்பு, இரக்கம் போன்ற மனிதனுக்குரியவை அனைத்தையும் துறந்து, நாக்கும் வயிறும் குறியுமே இன்பத்தின் திறவுகோல்கள் என்று கொண்டாடுகிறது. ஏனவே, துடிக்கும் புழுவைப் புணரவும், விம்மி வெடிக்கும் கண்ணீரைச் சுவைக்கவும் அமெரிக்கப் படையினரால் இயலும் நிறவெறி மட்டும்தான் அவர்களிடம் எஞ்சியிருக்கும்' பண்பாட்டு விழுமியம்|
அரசுப் படையைக் காட்டினும் கூலிப்படைச் சிப்பாய்களுக்குச் சம்பளம் அதிகமென்பதால், இராணுவத்திலிருந்து ராஜீனாமா செய்து கூலிப்படையில் சேருகின்றார்களாம் அமெரிக்க வீரர்கள். அமெரிக்காவால் புதிதாகப் பயிற்றுவிக்கப்பட்ட இராக்கிய வீரர்களோ, சொந்த மக்களைச் சுட மறுத்து போராளிகளின் அணியில் போய்சேருகின்றார்கள்.
கூலிக்குத் தம் உயிரை விலை பேசியிருக்கும் அமெரிக்கக் கூலிப்படைதான் இராக்கில் ஜநாயகத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கபடும் உற்பத்தி இலக்கைப் போலவே. கூலிப்படையினருக்கும் ஷஇலக்குகளை| நிர்ணயிக்கின்றது புஸ் அரசு.
கொல்லப்பட வேண்டிய போராளிகள், கைப்பற்றப்பட வேண்டிய ஆயுதங்கள், சதாம் அரசின் அதிகாரிகள், உருவாக்கப்பட வேண்டிய உளவாளிகள் - அனைத்திற்கும் இலக்கு தீர்மானிக்கப்படுகின்றது. இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளுக்கு வரம்பு இல்லை, முழுசுதந்திரம்! ஆந்தச் சுதந்திரத்தின் விளைவை அனுபவிக்கிறாள் இந்த இராக்கியப் பெண். (பின் அட்டை)
அவள் ஒரு போராளியின் மனைவியாக இருக்கக் கூடும், பிணைக்கைதியாக பிடித்து வரப்பட்ட சகோரதியாக இருக்கக் கூடும், சும்மா முகர்ந்துவிட்டு எறிவதற்காகக் கடைவீதியிலிருந்து இராணுவ வண்டியில் தூக்கிப் போடப்பட்ட யாரோ ஒரு பெண்ணாக இருக்கக் கூடும்;,. அல்லது உளவாளியாக மாற மறுக்கும் போராளியாவும் இருக்கக் கூடும்.
உளவாளிகளை உருவாக்கும் 'கலை| யில் அமெரிக்க இராணுவத்தைப் பயிற்றுவித்து வருகிறார்கள் இஸ்ரேல் உளவுத்துறை அதிகாரிகள். கைது செய்யப்படும் பாலஸ்தீனப் பெண்களை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கியும், நிர்வாணப் படமெடுத்தும் வைத்துக்கொண்டு அவர்களை விடுவிப்பதுளூ சில ஆண்டுகளுக்குப் பின் இந்தப் படங்களைக் காட்டி ஜந்தாம் படை வேலை செய்யச் சொல்லி நிர்பந்திப்பது, இல்லையேல் உன் குடும்ப வாழ்க்கையைச் சீர் குலைப்போம் என மிரட்டுவது.... இது இஸ்ரேலின் மொசாத் உளவுப்படை கையாண்டு வரும் வழிமுறை. இந்த வழிமுறைதான் இராக்கிலும் இன்று பின்பற்றப்படுகின்றது.
எனவே கற்பழிப்பைப் படம் பிடித்ததென்பது சிப்பாய்களின் வக்கிரம் மட்டுமல்ல, இந்த ஆக்கிரமிப்பு யுத்தத்தில் அமெரிக்க இராணுவம் கடைடித்துக் கொண்டிருக்கும் அதிகாரபூர்வமான போர்த்தந்திரம்.
'ஒன்று அராபியர்களுக்கு புரியக் கூடிய ஓரே மொழி வன்முறை, இரண்டு அவர்களுடைய மிகப் பெரிய பலவீனம் அவர்களது மான உணர்ச்சி|| ஷஎன்று அராபிய மனம்| ;(வுhந யுசயடி ஆiனெ 1973) எனும் நூலில் குறிப்பிடுகிறான் ரபேல் பதாய் என்ற அமெரிக்க ஆய்வாளன்.
'இந்தப் நூல்தான் இன்றைய புஸ் அரசின் வேதப் புத்தகமாக பயன்படுகின்றது|| என்று அபு கிரைப் கொடுமைகளை விளக்குகிறார் {நியூயாக்கர்| நாளேட்டின் செய்தியாளர் செய்மர் கொர்ஷ்.
மானத்தைத் துனியில் தேடும் தேசமா ஆயிரம் சவப்பெட்டிகளை அமெரிக்காவுக்கு அனுப்பியிரும்? தமது வீரத்தை கவசவண்டிக்குள் ஒளித்துகொண்ட அமெரிக்க சிப்பாய்களிடம் 'கால்செருப்பில் இருக்குதடா வீரம|; என்று கற்பித்தவர்கள் இராக்கின் சிறுவர்கள். தொருவோரக் கல்லும் தீக்குண்டாகு என்று இஸ்ரோலுக்கு நிருபித்து வருபவர்கள் பாலஸ்தீன இனைஞர்கள்.
உரியப்படும் ஆடை ஒவ்வொன்றுக்கும் ஓர் உடலைப் பரிசளிப்பார்கள் இராக் மக்கள். சவப்பெட்டிகளுக்கான ஏற்றுமதி வாய்ப்பை டில்லியை ஆளும் சவங்கள் கணக்கிடட்டும். அமெரிக்கச் சொர்க்கத்தை அடைவதற்க்காக விரதமிருக்கும் சவங்கள் இந்த படங்களைப் பார்த்த பின்ராவது உயிர் பெறட்டும்.
சூரியன்.
அபு கிரைப்; மிச்சமிருக்கிறது மனச்சாட்சி!
சென்ற யூன் 22ம் திகதி அமெரிக்காவின் மஸா சூசெட்ஸ் நகரில் ஜெப்ரி லுசி என்ற 23 வயது இளைஞன் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டான். அவன் இராக்கிலிருந்து திரும்பிய அமெரிக்க இராணுவச் சிப்பாய்.
மார்ச.2003-இல இராக்கின் நசிரியா நகரில் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட நிரயுதபாணிகளான இராக் மக்களைத் ஷதன்னுடைய| இராணுவம் கொலை செய்வதைக் கண்டு தவித்தான் லூசி. 'நான் இங்கே அறநெறியற்ற அநீதிகளைச் செய்து கொண்டியிருக்கிறேன்|| என்று தன் காதலிக்கு கடிதம் எழுதினான்.
அமெரிக்கா திரும்பியவுடன் தன் தந்தையிடம் பேசினான், 'நாங்கள் குழந்தைகளையும் முதியவர்களையும் ஒவ்வொரு நாளும் கொன்றிருக்கிறோம். என் வயதையொத்த இரண்டு இளைஞர்களை நெற்றியில் சுட்டுக் கொல்லுமாறு எனக்கு உத்தரவிட்டார்கள். அவர்கள் கண்களைப் பார்த்தேன், அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருக்காதா? தடுமாறினேன், சுட்டுவிட்டேன்|| என்று கூறி அழுதான்.
செத்துப்போன லூசியின் கழுத்தில் இரண்டு அடையாள அட்டைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவனால் கொலைசெய்யப்பட்ட இளைஞர்களின் படங்கள்.
சென்ற யூலை மாதம் மட்டும் இராக்கிலேயே 24 அமெரிக்கச் தற்கொலை செய்து கொண்டியிருக்கிறார்கள். இராக் சென்று திரும்பிய சிப்பாய்களில் 17சதவீதம் பேர் தற்கொலைக்குச் செல்லும் அளவிற்கு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருபதாகக் கூறுகிறது இங்கிலாந்துன் மருத்துவ ஆய்வுப் பத்திரிகை.
இராக்கிலிருந்து திரும்பிய அமெரிக்கச் சிப்பாய்கள் அமைப்பாகத் திரண்டு (ஐஏயுறு) இது ஏகாதிபத்திய யுத்தம் என்று பிரகடனம் செய்கிறார்கள்.
'என் கணவன் போருக்குச் சென்றிருக்கிறான் என்று என்று பெருமை பேசாதே... சாதனையாளர்களை எண்ணித்தான் பெருமைப்பட முடியும். வேறு வழியில்லாமல் சிக்கிக் கொண்டவர்களைப் பார்த்து யாராவது பெருமை கொள்ள முடியுமா? எங்களுக்காக அனுதாபப் படுங்கள், கண்ணீர் விடுங்கள்|| என்று இராக்கிலிருந்து கடிதம் எழுதுகிறார் ஒரு சிப்பாய். 2000 அமெரிக்கச் சிப்பாய்களின் குடும்பத்தினர் 'இராணுவத்தை திரும்பப்பெறு|| என புஸ்சை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
இராக்கிலிருந்து திரும்பிய சார்ஜென்ட் காமிலோ மெஜியோ மீண்டும் இராக் சென்று போரிட மறுத்துச் சிறை சென்றுயிருக்கிறார். கடும் தண்டனை விதித்தால் சிப்பாய்களிடையே கலகம் தோன்றுமோ என்று அஞ்சி ஓராண்டு மட்டுமே தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம்.
'இராணுவத்தில் சேர்ந்து இராக் செல்லும் மாணவர்களுக்கு உயர் கல்வி இலவசம்|| என்று ஏழை இளைஞர்களுக்குத் தூண்டில் வீசுகின்றது புஸ் அரசு.'எங்களுடைய போர், களத்தில் துவங்கவில்லை, கல்விக் கூடத்தில் தொடங்கின்றது|| என்று கண்டிக்கிறார் இராணுவ ஆளெடுப்பு மையத்தின் அதிகாரி.
ராபின் பான்டன் என்ற 13 வயதுச் சிறுமி... இராக் சென்றிருக்கும் சிப்பாயின் மகள் - அமெரிக்க நடாளுமன்றத்தின் முன் தன்னந்தனியே மறியல் செய்கிறால். 'என் தந்தையை எனக்குத் திருப்பிக் கொடு. ஓரு பொய்க்காக அவர் உயிரை விடுவதை நான் அனுமதிக்க மாட்டேன்|| என்கிறது அவள் ஏந்தியிருக்கும் முழுக்க அட்டை.
அபு கிரைப்: நாடாகம் கூறும் உண்மை
அபு கிரைப் கொல்கத்தாவில் நாடகமாக்கப்பட்டுள்ளது. 'இது கற்பனைக் கதையல்ல, அபு கிரைப் குறித்த மனித உரிமைக் குழுவின் ஆய்வறிக்கை, இராணுவ அதிகாரி அந்தோனியோ தகுபாவின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந் நடகம் தயாரிக்கப்ட்டுள்ளது. கதைமாந்தர்களும் உண்மையானவர்களே|| என்கின்றார் நாடகாசிரியர் சங்க்ராம் குகா.
ஒரு நீதிமன்ற விசாரணையைப் போல வடிவமைக்கப் பட்டுள்ள இந்நாடகம், வெறுமனே சித்திரவதையின் மட்டும் சித்தரிக்கவில்லை. 'சித்திரவதையின் நோக்கமென்ன?|| என்ற கேள்வியை எழுப்பிக் கீழ்க்கண்டவாறு விடைசொல்கின்றது.
'அபு கிரைப் சிறையில் கைதிகள் அனைவரும் சோதனைச் சாலை எலிகள். சித்திரவதையின் எந்தக் கட்டத்தில் ஒரு கைதி நொறுங்கிப்போய்ச் சரணடைகிறான் என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டு, அந்தத் தருணத்தில் அவனுடைய இரத்தத் துளிகள் சோதனைக்கு எடுக்கபடுகின்றன. இரத்தத்தின் மரபணுக் கட்டுமானத்தில் (புநநெவiஉ ளவசரஉவரசந) சித்திரவதை செய்யப்பட்ட மனிதனின் மனதில் உருவான பீதி என்ன விதமான மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றது எனபது கண்டுபிடிக்கப்படுகின்றது. சித்திரவதை தோற்றுவிக்கும் இந்தப் பீதியை, மரபணுக் கட்டுமானத்தில் மாற்றம் ஏற்படுத்துவதன் வாயிலாகவே ஒரு கைதியின் மனதில் தோற்றுவித்து விட முடியுமா என்பது அமெரிக்காவில் ஆராயப்படுகிறது. 'இதுதான் நாடகம் சுமத்தும் குற்சாட்டு.|| புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டம்|| என்று அழைக்கப்படும் உலக மேலாதிக்கத் திட்டத்தின் ஒரு அங்கம் தான் அபுகிரைப் சித்திரவதைகள் என்று நிறுவுகிறது நாடகம்.
இந்நாடகம் எழுப்பும் கேள்வி அதீதமானதோ, கற்பனையானதோ அல்ல, கைது செய்யப்பட்ட சீன மக்களைக் குறுக்கு நெடுக்காகப் பிளந்து பார்த்து அறிவியல் ஆய்வு நடத்தியது ஜப்பான் இராணும். மருத்துவ விஞ்ஞானிகளைப் பயன்படுத்தி இட்லர் நடத்திய ஆய்வுகளை அம்பலப்படுத்தியது 'மருத்துவர்கள்|| என்ற ஜெர்மன் நாடகம்.
அமெரிக்கா நடத்தும் உயிரியல் யுத்தம் என்பது விஞ்ஞானக் கதையல்ல, எதார்த்தம். நேற்று வியத்நாம்-- இன்று இராக்.
நன்றி புதியகலாச்சாரம்
நண்பன் அவர்களே
அதிர்ச்சியான செய்தி.... அறியத் தந்தமைக்கு நன்றி..
இந்த செய்தி இணைய 'அறிவுசீவி'களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ('ஆத்திர'த்தை அடக்க முடியாத) சிலர் கண்ணில் படவும் செய்யாது.. பட்டாலும் அதனை மறந்து விடுவார்கள்.. சந்தில் சிந்துபாடும் ஆரோக்கிய அயோக்கியர்களும் பொத்திக் கொண்டு போய்விடுவார்கள்..
al jazeera is the most popular news channel in arab world.if the news is real means a shame for bush!!!!!
நண்பன்,
புஷ்-டோனி கூட்டனியின் அராஜகத்தைப் பார்க்கும் போது, எனக்கென்னமோ ஹிட்லர் நல்லவராகத் தெரிகிறார்.
வாழ்க அமெரிக்க ஜனநாயகம்!!!
தமிழ் சர்க்கிள்,
மிக்க நன்றி. நீண்ட பின்னூட்டத்திற்கு.
சிறைக் கொடுமைகள் ஒரு மனிதனின் மனோதிடம் மட்டுமல்ல - அவனது மரபணு வரை ஊடுருவிச் சென்று
சோதித்துப் பார்ப்பதற்காக என்று எழுதியதைப் படித்த பொழுது அதிர்ச்சியில் உறைந்து போனேன். இதையே முன்னர்
ஹிட்லரும் செய்தார். இப்பொழுது புஷ் செய்கிறார்.
நல்லடியார் எழுதுகிறார் - ஹிட்லரை விட கொடுரமானவன்(ர் - என்று எழுத முடியவில்லை) புஷ் என்று. இந்தச் செய்திகளைப் படித்த பின் அதை
ஆமோதிக்கத் தான் செய்ய வேண்டியிருக்கிறது.
இஸ்லாமிய சகோதரர்கள் ஏன் எழுதுவதில்லை என்று ஒரு தளத்தில் வலிந்து வலிந்து கேட்டிருக்கிறார்கள். அவர்கள் இறைநம்பிக்கையை
ஒட்டிய விவாதத்தில் பங்கு பெறாதது ஏன் என்ற கேள்வியைக் கேட்கும் சமயத்தில், மதங்களை விட்டு விடுங்கள் - மனிதர்களை சோதனைச்
சாலை எலியாக பயன்படுத்தும் அவலத்தை ஏன் கேள்வி கேட்பது என்று புரியவில்லை. ஒரு வேளை தங்களது மனிதநேய அடிப்படையிலான மனநிலை
இஸ்லாமியர்களின் அவலத்தைக் கண்டு வருந்தவில்லையோ தெரியவில்லை.
இத்தனைக்கும் - அரபு நாடுகள் முழுக்க - இந்தியா பாக்கிஸ்தான் போரின் போது - பாக் ஆதரவு நிலை எடுக்க நம்மை ஆதரித்த ஒரே அரபுத் தலைவரும்
மக்களும் - சத்தாமும், இராக்கிய மக்களும் தான். இன்று மதத்தின் பேரால் பிளவு பட்டு கிடக்கும் நாம் - அன்று ஒரே மதமானாலும், நியாயத்திற்குப் போரிட்டதாகக்
கருதி இந்தியாவை ஆதரித்த அந்த அப்பாவி இராக்கிய மக்களுக்காகவாவது தங்கள் ஆதரவைத் தர வேண்டாமா?
என்ன ஒரு secularism பேசுகிறோம் நாம்?
ஒவ்வொரு முறையும் படிக்க முயன்று பாதிக்கு மேல் படிக்க முடியாமல் - நான்காவது முறையாகத்தான் படித்து முடித்தேன். கண்கள் கலங்குவதை
அருகிலிருப்பவர்கள் பார்த்து விடுவார்களோ என்ற அச்சமும் ஒரு காரணம். பல புகைப்படங்களைப் பற்றி பேசுகிறீர்கள்.
என்னுடைய வேண்டுகோள் - அந்தப் புகைப்படங்களைக் கொண்டு அனுதாபம் தேடவோ, விளம்பரம் தேடவோ முயற்சிக்காதீர்கள். அவற்றை
அழித்து விடுங்கள். அல்லது விநியோகம் செய்யாது, ஒரு சரித்திர பதிவு என்ற வகையில் ஆவணப்படுத்தி வைப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஒரு இஸ்லாமியப் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட கொடுமையை - ஏன் எந்தப் பெண்ணாக இருந்தாலென்ன, ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு
ஆளாக்கப்பட்ட கொடுமையைக் கொண்டு எந்த ஒரு பேரமும் பேசக் கூடாது.
எந்த காரணத்திற்காக பெண்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்களோ - அந்த நிகழ்வின் புகைப்படங்களைக் கொண்டு அனுதாபம்
தேடுவதோ, பேரம் பேசுவதோ - கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட அந்த பெண்களுக்கு எதிரான நிலையாக ஆகிடும்.
உங்கள் கட்டுரைக்கு மிக்க நன்றி.
உங்கள் அனுமதியின்றி அதை மற்ற விவாதத் தளமொன்றில் நண்பர்களின் பார்வைக்கு வைத்துள்ளேன். அனுமதி மறுக்க மாட்டீர்கள் என்ற
நம்பிக்கையில்....
அட்றா சக்கை -
நன்றி.
தொடர்ந்து வாசித்து வாருங்கள்
அன்புடன்
gulf tamilan,
எதையுமே அவமானமாகக் கருதாதவர் - புஷ்.
தடித்த தோல் படைத்த மனிதர் அவர்
என்ன செய்வது
நல்லடியார்
மிக்க மகிழ்ச்சி.
உங்களின் தளத்தை அடிக்கடி படித்து வருபவன்.
ஆன்மீகத் தளத்தில் விரிவான கருத்துகளை எழுதி, பல நண்பர்களுக்கு இஸ்லாம் பற்றிய தெளிவையும், ஞானத்தையும் கொடுத்து வருகிறீர்கள்.
உங்கள் பணி சிறக்க, எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு, நீண்ட ஆரோக்கியத்தையும், நல்வாழ்வையும் தரட்டும்.
என்னால் ஏனோ ஆன்மீகத் தளத்தில் இயங்க முடியவில்லை. என் பார்வைகள் வெறுமனே - சமூக பின்னணி சார்ந்தது. அங்கே மட்டுமே இயங்கவும் விருப்பம்.
ஆனால், உங்களைப் போன்று மார்க்கத்திற்கு எதிரான கருத்துகளைக் களைந்து, பிறருக்கு தெளிவைக் கொடுக்கும் பணிக்கு என்னுடைய ஆதரவு என்றும் இருக்கும்.
நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும்.
வ அலைக்கும் சலாம் நண்பரே!
இஸ்லாத்தை அறிந்து கொள்பவர்களுக்கு முஸ்லிம்கள் முன்மாதிரியாக இல்லை என்பது கசப்பான உண்மை. இதைக் காரணம் வைத்து இஸ்லாத்தையும் நம் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகளாரையும் ஏளனம் செய்வதை அறிந்துதான் அந்த அவதூறுகளை விளக்க என்னால் முடிந்த முயற்சிகளைச் செய்தேன்.
பொதுவான விஷயங்களை எழுத எனக்கும் ஆர்வம்தான். ஆனால் சந்தர்ப்பம் கைகொடுக்கவில்லை. அதுவரை உங்கள் போன்றவர்கள் தொடருங்கள்.
அன்புடன்,
நல்லடியார்
nalladiyar@gmail.com
Post a Comment
<< Home