BloggerTopAd:

wow gold|wow powerleveling

நிகழ்வு

செய்திகளும் விமர்சனங்களும்.....

My Photo
Name:
Location: துபாய், அமீரகம், United Arab Emirates

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்

Friday, December 16, 2005

Holocaust என்ற மாயை - அமெரிக்காவின் பொய்யுரை.

ஹோலோகாஸ்ட் - அமெரிக்காவின் பொய்யுரை?

வெற்றி பெற்றவர்களே வரலாறு எழுதுவார்கள் என்பது வரலாற்று நியதி. அந்த வகையில் இன்று உலகம் முழுவதிற்குமான வரலாறை அமெரிக்கா தனக்கு விருப்பம் போல எழுதிக் கொண்டிருக்கிறது.

தப்பும் தவறுமாக.

அது சரி - இந்த ஹோலோகாஸ்ட் என்பது என்ன?

சாரி சாரியான யூதர்களை வாயுக் குழிக்குள் தள்ளி, விஷவாயு பீய்ச்சிக் கொன்றது ஹிட்லரின் நாஜி படை என்ற நிகழ்வைத் தான் ஹோலோகாஸ்ட் - நெருப்பில் வீழ்ந்த தியாகம் என்கின்றனர்.

உலகையே உலுக்கிய குற்றச்சாட்டு அது.

ஜெர்மனி தலை குனிந்து நின்ற தருணம். தோற்றுப் போன நாடு. அவமானங்களையெல்லாம் தாங்கித் தான் ஆக வேண்டும். குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நாஜிக்கள் வேட்டையாடப்பட்டனர்.

உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனாக ஹிட்லர் சித்தரிக்கப்பட, அமெரிக்க அல்லது ரஷ்யர்களின் கையில் சிக்கி, அவமானப்பட விரும்பாத ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

யூதர்களுக்கு மிகப் பெரிய ஆதரவு திரண்டது. உலக மக்கள் அனைவரும் பரிவுடன் பார்த்தனர். உலகம் முழுக்க நாடற்று அநாதவராக நிற்பதினால் தானே இத்தகைய துயரம் - அதனால், அவர்களுக்கென்று ஒரு நாடு உண்டாக்க வேண்டும் என்று உரத்து எழுந்தன குரல்கள். அப்பாவி பாலஸ்தீனியர்களின் நாடு நிலமெல்லாம் பிடுங்கப்பட்டு, யூதர்களுக்கு நாடு உண்டாக்கப்பட்டது.

வல்லான் வகுத்த வாழ்க்கை என்ற மொழிக்கேற்ப, வெற்றியின் உச்சத்தில் மமதையில் நின்ற அமெரிக்கா, மத்தியக் கிழக்கில் தனக்கென ஏவல் செய்ய ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கோடு, பாலஸ்தீனியர்களைப் புறந்தள்ளி - ஒரு மக்களை அடிமைப்படுத்தி, மற்றதோர் இனத்திற்கு விடுதலை பெற்ற நாட்டைக் கொடுத்து, இன்றைய மத்திய கிழக்குப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தது.

இந்த உலகம் நாசத்தைத் தான் அடையும் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தும், அமெரிக்கா அதைப் பொருட்படுத்தாமல், பாலஸ்தீனியர்களுக்கு துரோகமிழைத்தது. அதற்கான நியாயம் தான் இந்த ஹோலோகாஸ்ட்.

யாருமே இந்த அநியாயத்தைக் கேள்வி கேட்கவில்லையா?

கேட்டிருக்கிறார்கள்.

இதுவரையிலும் ஹோலோகாஸ்ட் என்பதைப் பற்றி யாரும் எதுவும் கேட்கக்கூடாது என்ற கோட்பாடைத் தான் அனைவரும் கடைபிடிக்கின்றனர். கேள்வி கேட்பவர்கள் நாஜிக்கள் என்று தான் முத்திரை குத்தப்படுவார்கள். இந்த படுகொலை என்பது விசாராணக்கு அப்பாற்பட்டது - இதுவரையிலும் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தவை இறைவன், மதம், நபிமார்கள்.

இப்பொழுது அவற்றுடன் ஹோலோகாஸ்ட் - விசாரணைக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாக. கேள்வி கேட்கும் கொஞ்சம் நஞ்சம் சரித்திர ஆய்வாளர்களும் தங்களை "மறுப்பாளர்கள்" என்று சொல்லிக் கொள்வதில்லை. மாறாக"மீள்பார்வையாளர்கள்" என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஹோலோகாஸ்ட் நடக்கவில்லை என்பதில் இன்றும் பல குழுக்கள் உறுதியாக இருக்கின்றன - உலகம் முழுவதிலும்.

அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் சில வலது சாரி குழுக்கள். மத்திய கிழக்கில் சிரியா மற்றும் ஈரானைச் சேர்ந்த பல தனி நபர்களும், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் குழுக்களும் இந்த இனப்படுகொலை போலியானது என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர்.

2000 ஆவது ஆண்டில், ஹமாஸ் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் இந்த போலி படுகொலையைக் கண்டித்து பல விவாதங்களை முன் வைத்தது.' விஷவாயு அறைகள் கிடையாது. சில அறைகள், பிணத்தை பதப்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டன. Zyklon B, என்ற வாயுவை பயன்படுத்தினர். பிணங்களை அரிக்கும் கரையான்களை ஒழிப்பதற்காக வாயுக்களை பயன்படுத்தினர். அந்த அறைகளில் மூன்று அல்லது நான்கு பேருக்கு மேல் நிற்க முடியாது. அந்த அறையினுள் - எப்படி 60 லட்சம் மனிதர்களை அடைத்து, விஷவாயு செலுத்திக் கொள்ள முடியும்.?'

அந்த அறைகள் யூதர்களை கொல்வதற்காகப் பயன்படுத்தப்படவில்லை.
நாஜிக்கள் எரியூட்டும் அடுப்புகளைப் பயன்படுத்தவில்லை. இந்த அடுப்புகள் எல்லாமே மக்கள் புழக்கம் உள்ள இடங்கள்,தொழிலாளர் முகாம்கள் போன்றவற்றில் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால், அவ்வாறான அடுப்புகளுக்குப் பதிலாக, பிணங்களை வாயு அறைகளில் பதப்படுத்தி புதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதற்காக வாயு அறைகளை உபயோகப்படுத்தினர். இதைத்தான் வாயு அறை என்று பெயரிட்டு, தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர் நேச நாட்டு படைகள்.

மேலும், 60 லட்சம் யூதர்கள்?

அந்த அளவிற்கு மக்கள் தொகை ஜெர்மனியில் இருந்தார்களா யுத்தத்தின் போது? ஹிட்லரின் அடக்கு முறைகளுக்குப் பயந்து இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பாலஸ்தீனம் போன்ற இடங்களுக்கு ஓடிப்போன மக்கள் தொகையையும் சேர்த்துக் கொண்டனர்.

இரண்டாம் உலகப் போர் இறுதியில் இந்த அழித்தொழித்தல் வேலைக்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட பல புகைப்படங்கள் - நேச நாடுகள் கூட்டாகத் தயாரித்தவை.

நாஜிக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக.

நாஜிக்களைப் பலவீனப்படுத்த.

அவற்றில் ஒரு புகைப்படம் நேச நாட்டுப் படைகள் குண்டு வீசி தாக்கியதில் இறந்து போன ஜெர்மானியர்களின் புகைப்படம். டிரெஸ்டன் என்ற நகரின் மீது வீசப்பட்ட குண்டில் நிகழ்ந்த மரணம் அது.

மேலும் இந்த புகைப்படங்களில் காணப்படும் பலரும் பசியால் வாடியும், காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களாகவும் தான் காணப்பட்டனரே தவிர, வாயுத் தாக்கத்தால் இறந்து விட்டவர்களாக அறிய முடிவதில்லை என்று
'' மீள்பார்வையாளர்கள்'' கருதுகிறார்கள்.

நாஜிக்கள் செய்த கொடூரம் என்று கூறப்பட்டதானது உள்நோக்கமுடையது. யூத நாடு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற மெனக்கெடுதலினால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி பிரச்சாரம்.

அமெரிக்க, பிரிட்டிஷ், யூத சதிகளே இவை.

பலியாடாக யூதர்களையும், சாத்தானாக ஜெர்மனியையும் சித்தரிக்கும் முயற்சியில் நடத்தப்பட்ட நாடகம். மேலும், தான் கையகப்படுத்திய நாடுகளை அச்சுறுத்தி தன் மேலாண்மையை நிலைநாட்டுவதற்காக சோவியத் ரஷ்யாவும் இந்தப் போலி பிரச்சாரத்தில் பங்கு கொண்டது.

யூதப் படுகொலைகளை ஆதரித்து அலை அலையாக பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்ட பொழுது, அதை வரலாற்றியலாளர்களால், துணிவுடன் முனைந்து எதிர்க்க முடியவில்லை - பயத்தினாலும், வசதியான வாழ்க்கைகளைத் துறக்கும் சக்தியற்றதினாலும்.

ஆனால், இதே யூதர்கள் ரஷ்ய அரசுடன் இனைந்து கொன்று குவித்த அரசியல் எதிர்ப்பாளர்களையும், கிறித்துவர்களையும் கணக்கிலெடுத்தால், யூதப் படுகொலைகள் ஒன்றுமேயில்லை என்றாகிவிடும் என்கிறார்கள் வரலாற்றை மறு ஆய்வு செய்பவர்கள். இந்த யூதர்களுக்கு எதிராக ஜெர்மனியில் அரசு இயந்திரங்கள் மூலமாக நிறுவனமயமாக்கப்பட்டு குற்றங்கள் நடத்தப்படவில்லை. அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளெல்லாம் தனிப்பட்ட நாஜி அதிகாரிகளால் தான் நடத்தப்பட்டது. நாஜி தலைமை இதில் சம்பந்தப்படவேயில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த படுகொலை மறுப்பாளர்களின் ஆரம்பகால நூலாசிரியர் பிரான்சிஸ் பார்க்கர் யாக்கி என்ற அமெரிக்கர் தான். 1962ல் அவர் எழுதிய இம்பீரியம் என்ற புத்தகம் தான் முதல் பதிவாக வந்த மறுப்பு. அதற்கு முன் இருந்த மறுப்பாளர்கள் எல்லாமே நாஜிக்களே தங்களைக் காத்துக் கொள்வதற்காக நடத்திய பிரச்சாரங்கள் மட்டுமே.

யாக்கியுடன் இணைந்து கொண்டவர் ஹேரி எல்மர் பார்னஸ். அவர் குறிப்பிடுவது - ஜெர்மனிக்கும், ஜப்பானியர்களுக்கும்எதிராக அமெரிக்கா யுத்தத்தில் பங்கு பெற்ற தன் நிலையை நியாயப்படுத்த கிளப்பிய போலி கோஷம் தான் - ஹோலோகாஸ்ட்.

1964ல் பிரெஞ்சு வரலாற்றியலாளர் ஆன, பால் ரெஸ்ஸினியர் - தி டிராமா ஆஃப் தெ யூரோப்பியன் ஜ்யூஸ் என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இவரே படுகொலையிலிருந்துதப்பித்தவர் தான். பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

நவீன மீள்பார்வையாளர்கள் இவரது புத்தகத்தை ஒரு ஆதாரமாக கொள்கின்றனர். சிறப்பான ஆராய்ச்சி என்று சொல்கின்றனர்1943 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, பின் போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் - அப்பொழுது தான் யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் உச்சத்தில் இருந்தன.

இவ்வாறு சிறுக சிறுக ஆரம்பித்த ஹோலோகாஸ்ட் எதிர்ப்பாளர்களின் இயக்கம் 70களில் வலுக்க ஆரம்பித்தது. 1976ஆம் வருடத்தில் ஆர்தர் பஸ் என்பவர் எழுதிய தி ஹோக்ஸ் ஆஃப் தி ட்வண்டியத் செஞ்சுரி : தி கேஸ் அகய்ன்ஸ்ட் தி ப்ரிஸ்யும்ட் எக்ஸ்டெர்மினேஷன் ஆஃப்யூரோப்பியன் ஜ்யூரி மற்றும் 1977ஆம் ஆண்டு, டேவிட் இர்விங்க் எழுதிய ஹிட்லர்ஸ் வார் போன்ற புத்தகங்களின் வரவு இந்த இயக்கத்தை வலுப்படுத்தியது.

1979 ஆம் ஆண்டு, வரலாற்று மறு ஆய்வு மையம் (Institute of Historical Review - IHR) தொடங்கப்பட்டது வில்லிஸ் கார்ட்டோ என்பவரால். இந்த மையத்தின் நோக்கமே ஹோலோகாஸ்ட் என்ற புரளியை வெளிப்படையாக எதிர்ப்பது. இந்த அமைப்பினர் தான் பர்னஸ் எழுதிய புத்தகத்தைமீண்டும் வெளிக் கொண்டுவந்தனர்.

இந்த அமைப்பினர் கூறுவதாவது - மிகப் பெரிய தொகையில் யூதர்கள் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப் பட்டதில் சந்தேகமேயில்லை. இவர்களில் பலர் இயற்கையான மரணமோ அல்லது கொலையோ செய்யப்பட்டனர். மற்றும் பலர் யுத்தத்தில் இறந்தனர். ஆனால், ஹோலோகாஸ்ட் என்ற விஷவாயு அறைகளில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர் என்பது ஒரு பித்தலாட்டம். இதை உலகில் உள்ள அனைத்து கிறித்துவர்களும், நேர்மையும், உண்மையும் கொண்ட தகவலறிந்த மனிதர்கள் அனைவரும் இதை உணர வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் பல நாடுகளில் இந்த போலி பிரச்சாரத்தை எதிர்ப்பது குற்றமாகும். ஆஸ்திரியா, பெல்ஜியம்,செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், லித்துவேனியா, போலண்ட், ருமேனியா, ஸ்லோவாக்கியா, சுசிட்சர்லாண்ட் ஆகிய நாடுகளில் இந்த வரலாற்றுப் புரட்டைப் பேசினால் அபராதம் விதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவர்.

வாழ்க ஜனநாயகம்.

ஆய்வாளர்கள் அளவில் இயங்கிக் கொண்டிருந்த இந்த மறுபார்வையாளர்களின் விமர்சனங்கள் எப்படி உங்களுக்கும், எனக்கும் அறிமுகம் ஆயிற்று என்று கேட்கிறீர்களா?

போலிகளை எதிர்த்து போர்க்குரல் எழுப்பிய மஹ்மூத் அஹ்மத் இனேஜாத்.
ஈரானிய அதிபர்.

நன்றி.

Monday, December 05, 2005

சிகரெட்டுடன் ஒரு யுத்தம் - 25 வருடங்களாக

சிகரெட்டுடன் ஒரு போராட்டம்.

150 நாட்களும், ரஜினியும், அன்புமணியும்...... என்று தான் தலைப்பு வைப்பதாய் இருந்தேன்.

ஒன்றுகொன்று தொடர்பில்லாத தலைப்பா?

அன்புமணி - ரஜினி என்றதுமே உங்களுக்கு ஞாபகம் வந்திருக்க வேண்டும் - அது சிகரெட் தானென்று. (இல்லையென்றால் - மேற்கொண்டு படிக்காமலிருப்பது உத்தமம்.)

சரி. அவர்கள் இருவரையும் தொடர்பு படுத்தியாயிற்று. அதென்ன 150 நாட்கள்?
திரைப்படம் ஓடிய நாட்களா? இல்லை. பின்னே?

அது எனக்கான குறிப்பு. குறிப்புகளைக் கொண்டு விளங்குவது ஒருபுறம் இருக்கட்டும்.

அன்புமணி வேண்டுகோள் வைக்க, ரஜினி சந்திரமுகியில் சிகரெட்டை வைத்து ஆட்டம் காட்டாமலே நடித்து முடித்து - தான் ஒன்றும் பொது நல கருத்திற்கு விரோதியல்ல என்று நிரூபித்து விட்டார். ஆனால், சிலருக்கு இன்றும் ஆற்றாமை - அதெப்படி ரஜினி அன்புமணியோட ஒத்துப் போய்விட்டார் என்று. ரஜினி சும்மாவாச்சும் சிகரெட்டை கொளுத்தி இருக்கணும் - இது ஒரு தரப்பு. ஆ†¡ - கடைசியில் அன்புமணி ஜெயித்தே விட்டார். இது அவரது தரப்புவாதிகளின் எக்காளம்.

இந்த சிகரெட் அரசியலுக்கு நடுவே -

150 நாட்களாக நான் சிகரெட் பிடிப்பதை விட்டாகிவிட்டது. இதென்ன பெரிய சங்கதியா? எல்லோருக்கும் சொல்லித்தான் ஆகணுமா என்ன?

பெரிய சங்கதியா - சின்ன சங்கதியாங்கறது எனக்குத் தான் தெரியும் -

ஒவ்வொரு வருடமும் சிகரெட்டை விட்டு விடுவதாக உறுதிமொழியெல்லாம் எடுத்து தம் பிடித்து - ரத்தத்தில் கலந்த நிகோட்டின் துகள்களின் நச்சரிப்பையெல்லாம் தாக்குப் பிடித்து ஜனவரியை ஓட்டி விட்டு - பிப்ருவரி இரண்டாவது வாரத்துக்குள்ளே அடியெடுத்து வைக்கும் பொழுது சொல்லி வைத்தாற் போன்று நண்பர்களில் ஒருவன் வந்து ''வாடா, போய் ஒரு ரவுண்ட் பீர் அடிச்சுட்டு வரலாம்''னு கிளப்பிட்டு போய்டுவான்.

அப்புறம் கதையே வேற....

"பீர்( Beer ) தானா? இல்லை - விஸ்கியா?"
(அடைப்புக் குறிப்புக்குள் இருப்பது எல்லோரும் சரியாக விளங்கிக் கொள்ள - யாராவது பீர் என்பதை Peer என்று வாசித்து விட்டால் அது என்னோட பேர் ஆகிவிடும். இதற்காகத் தான் ஆங்கில சொல்லாடல்களை மொழி பெயர்ப்பு செய்வது அவசியம்.)

"பீர் வேணாண்டா - தொப்பை வைக்கும் - விஸ்கி சொல்லு..."

"சரி.... " சுற்றுமுற்றும் பார்க்கும் குறிப்பறிந்து பணியாள் வந்து நிற்க - ''இரண்டு லார்ஜ் - சோடா - ஐஸ் - அப்புறம்,'' என்னிடம் திரும்பி ''என்ன சிகரெட்?''

''அதெல்லாம் விட்டுட்டேன்..''

''†...க்.... என்ன சொன்னே....."

''ஆமாம் - அப்படித்தான்...."

"சரி, சரி.... எனக்கு மட்டும் வில்ஸ் ஒரு பாக்கெட்...."

சட்! இந்தப் பயல் எனக்குத் தூண்டில் போடுகிறான். வில்ஸ்... Made for each other...

சட்டென்று அந்த விளம்பரக் காட்சி கண் முன் வந்து, என் அனுமதிக்காகக் காத்திராமல், என்னைக் கட்டில் தன்னுள் இழுத்துக் கொண்டே போயிற்று. விளம்பரத்தினால் - திரைப்படத்தினால் - என்ன பெரிசா வந்திடப் போகிறது என்று அழிச்சாட்டியமான பின்னூட்டங்கள் போடறவங்களுக்குப் புரியாது.புது வருட சபதமாக சிகரெட்டை விட்டுவிட்டு ஐந்தாவது வாரத்தில் இருப்பவர்களுக்குத் தான் தெரியும் - இந்த புகைப்படங்கள் - விளம்பரங்கள் - திரைப்படங்கள் எத்தனை வலிமையானவை என்று.

கொஞ்சம் கொஞ்சமாகத் தூங்கப் பழகிக் கொண்டிருந்த நிகோட்டின் ருசியை ஒரே நாளில் பற்ற வைத்து விடும். இந்த விளம்பரங்களின் வெற்றியே - அதை ஒரு உயர்ந்த வாழ்க்கைத் தரமாக நிறுவ முனைந்து அதற்காக வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களின் திரு-உருக்களை (icons of success) முன் வைத்து, அவர்கள் தங்கள் வாயால், சொல்ல வைப்பது தான் - விளம்பர வெற்றி.

ஒரு பொருளுக்குத் தர நிர்ணயம் கொடுக்கும் நம்பிக்கையான பக்கத்து வீட்டுக்காரன் போல - தர நிர்ணயம் செய்ய போதுமான அறிவு பக்கத்து வீட்டுக்காரனுக்கு இருக்கிறதா என்பது வேறு விஷயம்.

முதன் முதலில் என்னைக் கவர்ந்த விளம்பரம் - ஊக்கமுள்ளோர்க்கு திருப்தி தரும் சிசர்ஸ் தான்.

ஜாக்கி ஷெரா·ப்?

குறுகுறுவென தாடி. நீண்ட முடி கூர்மையாகக் கண்களை இடுக்கிப் பார்க்கும் அழகு - ஒரு ஜீப்பில், தடைகளைத் தாண்டி பறந்து அடுத்த பக்கத்தில் இறங்கி, நிதானமாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைக்க - ஆ†¡ - ஊக்கமுள்ளவனாக இருக்க வேண்டும் என மனம் பரபரத்தது. ஏனென்றால் அப்போதெல்லாம் வீட்டில் வாங்கிய ''தெண்டச்சோறு'' திட்டல்கள் தான். ஏதோ எதற்குமே இலாயக்கில்லாமல் போய்விடுவானோ என்ற அதீத பயத்தில் தான் அத்தனை திட்டுதல்களும்... பத்தாவது படிக்கும் பொழுது என்ன சாதித்து கிழிக்கச் சொல்கிறார்கள் என்ற கோபம் மனதில் எப்பொழுதுமே இருந்தது. ஏதாவது அவர்களுக்கு எதிராக செய்தே விட வேண்டும் என்ற அசாத்திய எதிர்ப்புணர்வும் இருந்தது.

இந்தக் குழப்பமான மனநிலையில் தான் அந்த ''ஊக்கமுள்ளோர்க்கு பரமதிருப்தி'' ஜாக்கி ஷெரா·ப் வந்தார்.

பின்னர் இவரை நேரில் சந்தித்திருக்கிறேன் - பார்க் ஷெரட்டன் ஓட்டலில், 1989ஆம் வருடம். அங்கு உதவி பொறியாளராக பணியாற்றிய பொழுது - ஜாக்கி தங்கியிருந்த அறையிலிருந்து fire alarm வர ஓடிச் சென்றோம் - நானும் என்னுடன் இருந்த ஒரு பிளம்பரும். தடதடவென ஒடி, எந்த அறை என்று பார்த்து கதவை படபடவென்று தட்டி, திறந்தால்

- ஜாக்கி நிற்கிறார்.

"What ?'' சற்றே எரிச்சல். நாள் முழுவதும் ஏதோ ஒரு ஒளிப்பதிவிலிருந்துவிட்டு வந்திருக்க வேண்டும்.

"We got a fire alarm from your room "

"Is it? " குரலில் சற்று கோபம் கூடியது.

தவறான எச்சரிக்கை என்று பட்டது. ஆனால் என்ன பண்ண முடியும்? ஒவ்வொரு எச்சரிக்கையும் கண்டு கொள்ள வேண்டும். இல்லை, ஏதாவது எசகு, பிசகாகி விட்டது என்றால் - பின்னர் முதல் பலி பொறியாளர்கள் தான்!

"Where is the fire?"

"Sorry sir - It might be a fault"

''No, there is a fire - see, in my head" ஏதோ ஒரு கோபம். யார் மீதோ. அதையெல்லாம் கண்டு கொண்டிருக்க முடியாது. Smoke detector ஐத் திருகி சுத்தம் செய்து மீண்டும் மாட்டி விட்டு, கீழிறங்கிய பொழுது சகஜ நிலைமைக்குத் திரும்பியிருந்தார்.

"Its all right. Give me a beedi" என்று கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

"I will give you cigarrette - Charms?" சார்ம்ஸ் சிகரெட்டின் நீல வண்ண ஜீன்ஸ் வடிவ நிறம் கவரந்திருந்தது என்னை. அவரிடம் சிகரெட்டை நீட்டிய பொழுது மறுத்துவிட்டார். ஒரு காலத்தில் சிகரெட்டை இவரைப் போல பிடிக்கனும்னு ஆசைப்பட்டிருக்கிறேன். இன்று என்னிடம் பீடி கேட்கிறார். பக்கத்தில்நின்ற பிளம்பர் தன்னுடைய பீடிக்கட்டை எடுத்துக் கொடுக்க ஆர்வத்துடன் நாலைந்து எடுத்துக் கொண்டார்.

ஆமாம் - மனதில் ஒருவர் மீது நல்லெண்ணம் வந்து, அவரை தன் ஆதர்ச நாயகனாக உருவகப்படுத்திக் கொண்டால், பின்னர் அவர்கள் செய்வதில் கொஞ்சமேனும் நாமும் செய்துவிட வேண்டும் என்ற ஆர்வம் உந்தத் தான் செய்கிறது.

யாராவது அதெல்லாம் சுத்த ''ஹம்பெக்'' என்று போகிற போக்கில் வேண்டுமானல் பேசிவிட்டுப் போகலாம். ஆனால், நிஜத்தில் மனம் அலைக்கழிக்கப்படுகிறது என்பது என்னவோ உண்மை தான். சிறு வயதில், ஆதர்ச நாயக பிம்பம். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்றவர்களின் அங்க அசைவுகள் - body language - அவர்களின் mannerism எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும் - அவர்களைப்போல ஆக வேண்டும். இதில் எல்லாருமே அடக்கம்.

பிடல் காஸ்ட்ரோவைப் பார்க்கும் பொழுதெல்லாம் - அந்த க்யூபன் சுருட்டுகளை எப்பவாவது ஒருநாள் பிடித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவல்.

அரபிகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு ஹூக்கா பிடிக்கும் பொழுதெல்லாம் நாமும் போய் அந்த வட்டத்தில் ஒரு ஆளாக ஆகிவிடலாமா என்ற உந்துதல் - நப்பாசை...

பழைய Cowboy படங்கள் பார்க்க உட்கார்ந்தால் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் குதிரை மேலே அமர்ந்து கால்சராயின் தையலில் உராசி நெருப்பு பற்றவைத்து, சுருட்டு பற்ற வைக்கும் அழகைப் பார்த்தாலே உடனே ஓடிப்போய் ஒரு சிகரெட் பிடித்து விட்டு வந்துவிடாலாம் என்று தோன்றும்.

அதே போல Marlboroughவின் குதிரை மனிதன் என்னைக் கடத்திக் கொண்டு போய்விட்டான் ஒரு கட்டத்தில் - கடந்த மூன்று வருடங்களாக இந்த சிகரெட்டைத்தான் பிடித்துக் கொண்டிருந்தேன்.

இப்படியாக இந்த விளம்பரங்களின் வலிமை இந்த வருட முதல் தேதி சபதமேற்பவர்களுக்குத் தான் தெரியும்.

நண்பனின் வில்ஸ் சிகரெட்டைப் பார்த்த பொழுது, விஸ்கியின் சுவையை விட, உதடுகளை நனைத்து நனைத்து சுவைக்கும் விஸ்கியை விட, ரத்தமெங்கும் சூடான நிகோட்டீன் மணம் மூளையின் அனைத்துப் பாகங்களிலும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது - சிகரெட் பிடி என்று. அது மட்டுமல்ல - பழைய நினைவுகளையும் அது கிளறி விட்டுக் கொண்டிருந்தது.

1995 - 96 ஆம் வருடம் என நினைக்கிறேன்.

இந்த வில்ஸ் சிகரெட் விளம்பர வடிவமைப்பில் என் கருத்தும் அறியப்பட்டிருக்கிறது - ஒரு சர்வே மூலமாக.

நான் ஆமோதித்த விளம்பரம் தான் இப்பொழுதும் எங்கும் இருக்கிறது....
அது..........

Wills brand cigarrette ற்காக ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதனுட்டைய நோக்கம் - வில்ஸ் சிகரெட்டீற்காக அதுவரையிலும் உபயோகத்தில் இரூந்த விளம்பர மாடல்களை மாற்றிவிட்டு புதிய இளமையான மாடல்களைக் கொண்டு வரலாம் என்ற திட்டம்.

பழைய மாடல்கள் - ஒரு குடை நிழலில் உட்கார்ந்து கொண்டு The Official Polish Jokes படித்து சிரித்துக் கொண்டிருப்பார்கள். புதிய மாடல்கள் புறாக்களுக்கு இரையை இறைந்து விட்டு அவற்றின் நடுவே நின்று சிரித்துக் கொண்டிருப்பார்கள். Made for each other வாசகம் காற்றில் மிதந்து கொண்டிருக்கும்.

(நமக்கு போதாதா நேரம் - அந்த Made for each other என்ற வாசகத்தை பாலசந்தர் கன்னாபின்னாவென்று பிரபலப்படுத்தி விட்டார் - சரியாக 1981 கமலஹாசனும், ரத்தி அக்னிஹோத்ரியும் ஏக் துஜே கே லியே மூலம் ஒருவருக்காக மற்றவர் என ஆடிப்பாடி பிரபலப்படுத்திய வாசகம் அது.)

என்னிடம் கருத்துக் கணிப்புக்காக ஒருவர் வந்தார். விளம்பரங்களின் மாடல்களை மாற்றுவது குறித்து பொது மக்களிடமிருந்து கருத்து கணிப்பு எடுக்க.

அது கீழ்க்கண்டவாறு போயிற்று.

"மன்னிக்கவும் தொந்தரவிற்கு." கருத்துக் கணிப்பிற்கு வந்திருந்த நண்பர்.

"பரவாயில்லை."

"என்ன சிகரெட் சார் பிடிக்கிறீர்கள்?"

"Wills"

"எத்தனை வருடங்களாக சார்?"

"ஒரு பதினைந்து வருடங்களாக"

"சரி. இந்த பாக்கெட் வில்ஸ் சிகரெட்டை வைத்துக் கொள்ளூங்கள்"

"ஐயோ, வேண்டாமே"

"இல்லை எடுத்துக் கொள்ளூங்கள் - ITCக்கு நட்டம் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. பெரிய கம்பெனி சார்."

"அதற்கில்லை. இலவசத்தை ஏற்பதில்லை. அதனால் தான்"

"என்ன சார் - இப்படி சொல்றீங்க - ஓடற டிரய்ன்ல அவசரத்துக்கு யாரிடமாவது கேட்க மாட்டமா என்ன?"

"சரி. தேங்க்ஸ்''

"சார் இந்தப் புகைப்படங்களைப் பார்த்து இதற்கு முன்னாடி எங்காவது பார்த்திருக்கிறீர்களான்னு சொல்றீங்களா"

கொஞ்சம் வியப்பு எனக்கு! யாரோட புகைப்படம்? ஆவலுமிருந்தது.

"காட்டுங்கள்"

"இது தெரியுதா சார்?"

தினமும் விளம்பரத்தில் வரும் புகைப்படம் தான் அது. வாக்கியங்கள் நீக்கப்பட்டிருந்தது.

"உ-ம் - தெரியுது - ஹனி ட்யூ கோல்ட் ·பிளேக் - கிங்க்ஸ்"

"குட். இது.....?"

"பார்த்திருக்கிறேன் - ஆனால் எந்த ப்ராடக்ட்னு வரமாட்டேங்குது - சட்.."

"விடுங்க... இதைப் பாருங்க - "

"ஓ - நம்ம பிராண்ட் - வில்ஸ்..."

"உங்களுக்குப் பிடிக்குமா ?"

"யெஸ். வெரி மச்"

"எதனால் "

"நான் பிடிக்கும் சிகரெட் தரும் status symbol!! Made for each other என்ற வாசகம்"

"இவர்களை மாற்றினால் - எப்படி ·பீல் பண்ணுவீங்க?"

"வெரி சாரி. "

"சரி இப்போ இதைப் பாருங்க - "

" நன்றாக இருக்கிறது. "

" இவர்கள் தான் புதிய மாடல்கள். "

"வெரி யூத்·புல் "

"இவர்கள் மாடல்களாக இருந்தால், பிடிக்குமா?"

ஒரு நிமிடம் ஆழ்ந்து கவனிக்கிறேன். பழைய புகைப்படத்தில் ஒரு அழகான ஆண் பெண் அமர்ந்து புத்தகம் வாசித்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆணின் கையில் சிகரெட் இருக்கிறது. பெண் அந்த சிகரெட் புகைந்து கொண்டிருப்பதைப் பற்றிய பிரக்ஞை கொஞ்சம் கூட இல்லாமல் - தலையைப் பின்னோக்கி வீசி கண்மூடி சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆச்சரியம் -

சிகரெட் விளம்பரங்களில் அனைத்திலுமே - பெண்கள் இருக்கின்றனர் - அழகான ஆடையுடுத்தி. சிகரெட்டைக் கண்டு முகம் சுளிக்காதவர்களாக. எனக்கு இது கொஞ்சம் கூட விளங்கவில்லை. ஏனென்றால் நான் பழகிய பெண்கள் எவருமே சிகரெட்டை ரசிக்கவில்லை.

அதிர்ச்சியுடன் கேட்பார்கள். ''என்னடா, நீ சிகரெட்லாம் பிடிப்பாயா?''

அவர்களுடைய ஆச்சரியம் என்னைத் திகைக்க வைக்கும் - ''ஆமாம் - இதிலென்ன பெரிதாக இருக்கிறது.?" அந்த விளம்பரங்களில் வருவது போல பெண்கள் எல்லோருமே சிகரெட் பிடிப்பதை ரசிப்பார்கள் - அது ஆண்மைத்தனமானது என்றே நினைத்திருந்தேன். ஆனால், திருநெல்வேலிப் பெண்கள்1980களில் சிகரெட்டை ரசிக்கவில்லை. தோழிகளுக்குப் பிடிக்கவில்லை என்ற பொழுது அது ஒன்றும் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால், காதலித்துப் பின் மனைவியானவளும் எதிர்ப்பு தெரிவித்த பொழுது தான் பெரிதாகக் கோபம் வந்து விட்டது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக இடம் கொடுத்தால் அப்புறம் என்ன ஆவது.?

அதனால் "நோ. சிகரெட் பிடிப்பேன்."

"சரி - பிடிச்சுத் தொலை" அலுப்புடன் ஒத்துக் கொண்டவளை எப்படியாவது அன்புடன் ஏற்றுக் கொள்ளச் செய்து விட வேண்டும் என்ற ஆசையில் கவிதையெல்லாம் எழுதிக் கொடுத்தேன்.

மனைவி...........

உறிஞ்சப்படும் சிகரெட்டாய்
காலம் கரைகிறது.

நீ மட்டும் தான்
கரையவில்லை.

இத்தனை வருடம் கழித்தும்
சிகரெட் உமிழும்
புகையின் மணத்தை
ரசிக்க.

ஆனால், மனைவி கூட ரசிக்கவில்லை - சிகரெட்டின் புகைமணத்தை. ஆக, விளம்பரங்களில் பெண்களை முன்நிறுத்துவதும், அவர்கள் நடுவே புகை பிடிப்பவர்கள் நாயகர்களாக இடம்பெறுவதும் ஆண்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சிறிய முயற்சி - அதை ஒரு மேம்பட்ட வாழ்க்கையாக மாற்றிக் காட்ட சினிமா மற்றும் விளம்பர நிறுவனங்கள் செய்யும் முயற்சியே. அத்தகைய ஒரு முயற்சியில் அன்று ITC ஈடுபடும் பொழுது, நானும் அவர்களுடன் ஒத்துழைத்திருக்கிறேன் - பெருமையுடன்.

விளம்பரத்திற்கு எத்தகைய ஆணும் பெண்ணும் தேவை - அழகாக என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள நானும் உதவியிருக்கிறேன்.

"ஆம். இவர்கள் மாடலாக இருந்தால் நன்றாகத் தான் இருக்கும்." இவ்வாறு சொல்லும் பொழுதே அந்த பழைய மாடல் முகங்களும் வந்து செல்கின்றன - ஏன் நாங்க அழகாக இல்லையா என்று.

ஒரு நிமிடத் தயக்கம்.

ஒருவேளை பழைய மாடல்களே நன்றாக இருந்திருப்பார்களோ? "ஒரு நிமிடம் அந்தப் பழையமாடல்களிருக்கும் புகைப்படத்தைக் காட்டுகிறீர்களா?"

"எதற்கு சார்?"

"இல்லை, இறுதியாக - உறுதியாக சொல்லுமுன் ஒரு நிமிடம் பார்த்து விடுகிறேன்."

"பரவாயில்லை சார். நான் புதியவர்களையே நீங்கள் விரும்பியதாக எழுதிக் கொள்கிறேன்"

"அப்படீங்கிறீங்க"

"ஆமாம் சார் - அப்படியே இருக்கட்டும். இந்த பேப்பர்களில் கொஞ்சம் கையெழுத்திடறீங்களா?"

"என்ன பேப்பர்?"

"நான் உங்களைப் பேட்டி கண்டதற்கான அத்தாட்சி"

"ஆனால் நிறைய இருக்கிறதே - ஒரு இருபது பக்க வரைக்கும்?"

"அதெல்லாம் நானே நிரப்பிக்கிறேன் சார். நீங்க கையெழுத்து மட்டும் போட்டா போதுமானது"

"நான் ஒரு நிமிடம் உள்ளே பார்க்கலாமா?"

"ஓ! யெஸ். ஆனால், அதெல்லாம் உங்களோட நேரத்தை வீணாக்கும்"

"பரவாயில்லை - நான் பார்க்கிறேன்"

"ம்.. பாருங்கள்"

"வேற வேற கேள்விகளெல்லாம் இருக்கிறதே..."

"எதாவது ஒரு கட்டத்தில நானே டிக் அடிச்சுக்கிறனே - நீங்க கையெழுத்து மட்டும் போடுங்க சார்.."

அவர் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார் - உள்ளே இருந்தவற்றில், எதுவுமே நேரிடையாக எந்தப் புகைப்படங்களைப் பிடித்திருக்கிறது என்று கேட்கவில்லை. மாறாக, வேறு வேறு கேள்விகள். அந்த கேள்விகளுக்கு முழுவதும் பதில் அளித்த பின்னரே - இறுதியாக எந்த மாடல்களைப் பிடித்திருக்கிறது என தேர்ந்தெடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. வெறும் புகைப்படத் தோற்றத்தினால் தீர்மானிக்கக் கூடிய வகையில் அல்லாமல், மற்ற காரணிகளையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

"எப்படி நீங்க இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என் சார்பில் பதில் சொல்வீர்கள்?"

"சார் உங்களுக்கு ஒன்று சொல்லட்டுமா?" குரல் தணிகிறது "புது மாடல்களைப் போடலாம்னு முடிவு பண்ணியாச்சு - ஆனா, அதற்கு ஆதரவிருக்குன்னு சொல்லிக்க ஒரு ஆவணப்படுத்துதலுக்குத் தான் சார் இத்தனையும்.... ப்ளீஸ் நீங்க கையெழுத்துப் போடுங்க... மற்றவற்றை - தேவையானவற்றை நானே எழுதிக்கிறன்..."

ஒரு தீர்மான முடிவிற்கு வரக்கூட நேரம் கொடுக்காமல், வடிவமைக்கப்பட்ட பத்திரங்களை நிதானமாக வாசிக்கவிடாமல், ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒரு விஷயத்தை ஆவணப்படுத்துதலுக்காக - நியாயப்படுத்தலுக்காக ஒரு கருத்துக் கணிப்பு - ஒரு வாக்கெடுப்பு. ஆனால், நமக்கென்ன? அவர் இருந்தாலென்ன, இவர் இருந்தாலென்ன? வில்ஸ் புகைப்பதில் உள்ள ஆனந்தம் - ஆனந்தமே... போடு கையெழுத்தை.

நான் கையெழுத்து போட்டுவிட்டதால், இனி அவற்றைக் கேள்வி கேட்கக் கூடாது தான். ஆக, நான் வெறும் சிகரெட் மட்டும் புகைப்பவன் அல்ல - அதற்கான விளம்பரங்களின் வடிவமைப்பில் பங்கெடுத்துக் கொண்டவனும் கூட.

ஏதோ ஒரு நியாயம் - சிகரெட் பிடிப்பதற்கு.

இந்த சமயத்தில் இந்தியா டுடே-யின் செக்ஸ் கருத்துக் கணிப்பு நினைவிற்கு வருகிறது. - எத்தனை பேரிடம், நியாயமாக கருத்துக் கேட்டிருப்பார்கள் - எத்தனை பேர் - அதுவும் பெண்கள் கூச்சப்படாமல் கருத்து சொல்லியிருப்பார்கள் - எத்தனை பேர் அதன் படிவங்களை வாசித்துப் பார்த்து கையெழுத்திட்டிருப்பார்கள் என்ற சந்தேகம் பலமாக எழுகிறது.

என் அனுபவத்தைப் போலவே, யாராவது ஒருவர் உட்கார்ந்து கொண்டு, தாங்களே நிரப்பி, தாங்களே ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி, அதை நியாயப்படுத்துவதற்காக குஷ்பு போன்ற பிரபலங்களை வைத்து கருத்து சொல்ல வைத்து - இப்படியும் கூட நடந்திருக்கலாம். சாத்தியக் கூறுகள் உண்டு. ஏன், தேர்தல் கணிப்புகளெல்லாம் ஏறக்குறைய இத்தகைய சூழலில் தானே நடத்தப்படுகிறது - வேண்டியவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வதற்குத் தானே - கருத்துக் கணிப்பு?

சரி சரி, குஷ்புவிற்கு வேண்டாத நேரம் போல...

நம் கதைக்கு வருவோமே....

நண்பன் வாங்கிய சிகரெட் பொட்டலம் மேஜை மீது அமர்ந்து கொண்டு
நையாண்டி செய்து கொண்டிருந்தது என்னை. ஒரு சுண்டுவிரலைக் கொண்டு விளித்தது. வலுக்கட்டாயமாகபார்வைகளைத் திருப்பிக் கொண்டு, விஸ்கியை உறிஞ்சுகிறேன். சூடாக, சூடாக உள்ளே போகும் திரவம், துணைக்கு புகை கலந்த காற்று வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்தது.வாங்கிய வறுத்த கோழிகளோ, சுட்ட மாமிசத் துண்டுகளோ எதுவுமே இல்லை என்று ஆகிப் போனது அந்த இரவு. என் நெளிதலைப் புரிந்து கொண்ட நண்பன் அன்பாக சொல்லுகிறான்.
"தோழரே, தண்ணியடிச்சா சிகரெட் பிடிக்கணும். இப்போ பிடியுங்க, அப்புறம் நாளைக்கு காலையிலயிருந்து வேண்டாம் - அவ்வளவு தானே..!"

அவ்வளவு தான்.

ஏதாவது ஒரு சாக்குத் தான் தேவைப்பட்டது அந்த இடத்தில்.

சிகரெட்டின் -
அந்த வடிவத்தை ரசிக்கும் கண்கள்
பற்ற வைக்காத சிகரெட்டை நுகரும் நாசி
பிணக்குத் தீர்ந்து விரிந்து ஏற்றுக் கொள்ளும் உதடுகள் கைகள் பரக்க பரக்க தீப்பெட்டி தேடி பற்ற வைக்க

கடந்த ஐந்து வாரங்களாக மனதில் அரித்துக் கொண்டிருந்த ஒரு நடுக்கம் மெல்ல மெல்ல புகையுடன் கலந்து கலந்து வெளியேற, சிகரெட்டின் Made for each other விளம்பர வாசகம், 'மாட்டினியாடா, மவனே' ன்னு புன்னகை பூக்க, - போச்சு.

இந்த வருடத்தின் முதல் தேதி உறுதி மொழி - இந்த வருடம் சிகரெட் விடுவேன் என்ற உறுதிமொழி போச்சு.

இன்னும் சொல்லப் போனால், சிகரெட்டை விட முனைந்தவர்கள் - ஜனவரி முதல் தேதி உறுதிமொழியாக ஏற்காமல் இருப்பதே நல்லது.

இப்படியாக சிகரெட் பிடிப்பதற்கான நியாயங்களைத் தேடி அலைந்திருக்கிறேன்.

சில நியாயங்கள் - பயங்கரமானவை.

அது 1992 - பெப்ருவரி மாதம்.

பெங்களூரில் acrex-92 நடந்த சமயம். (acrex - airconditioning & refrigeration exhibition)
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் - பெங்களூரில் தரை இறங்க தயார் படுத்திக் கொண்டிருந்தது. ஏர்பஸ்320. fly by wire என்று பிரமாதமாக விளம்பரமெல்லாம் வேற. விளம்பரங்களினால், மனதின் முடிவெடுக்கும் திறன் பாதிக்கிறதா என்பவர்களுக்கு - கண்டிப்பாகப் பாதிக்கிறது.

விமானம் White field அருகே தரையை நோக்கித் தாழும் பொழுது, அதன் அடிவயிறு இரண்டாகப் பிளந்து கொள்ள - அந்த கோர விபத்து நிகழ்ந்து விட்டது. பலரும் மரணமாகிவிட சிலர் உயிர் பிழைத்துக் கொண்டனர். அவர்களில் ஒருவரை acrexல் சந்தித்த பொழுது - ஜப்பானியர் - சொன்னார், "நடுவில் தானிருந்தேன். நான் சிகரெட் புகைப்பதால் என்னை இறுதியாக கழிவறை இருக்கும் இடத்திற்கு மாற்றிவிட்டனர். இறுதியாக இருந்தவர்கள் தான் பிழைத்துக் கொண்டனர். " என்றவர் மேலும் தொடர்ந்து சொன்னார்.

"சிகரெட்டினால் புற்று நோய் வந்து சாவீர்கள் என்று எல்லோரும் மிரட்டுகிறார்கள். இனி அது எடுபடாது. நான் புகைபிடிக்காதவனாக இருந்தால், இன்று இறந்திருப்பேன். ஆதலால், இனி மீதமுள்ள நாட்கள் எனக்குப் போனஸாக அதிகமாக கிடைத்த நாட்கள். இனி, புற்று நோய் வந்தாலும் வேறு என்ன வந்தாலும் அதை விடுவதில்லை. "

கூடியிருந்த புகைபிடி குடிகளுக்கெல்லாம் அதை கேட்க என்ன ஒரு ஆனந்தம். நல்லவேளையாக கோயில் தான் கட்டவில்லை.

ஆனால், அந்தப் புற்று நோய் விஷயம் தான் என்னை மிகவும் பாதித்தது. ஏனென்றால் என் தந்தையும் புகைபிடித்ததினால் தான் வாயில் புற்று நோய் வந்து மரணம் அடைந்தார். அப்படி புற்று நோய் வந்திருக்கிறது என்பதே உணவு உண்ண முடியாமல் போனதும் தான் வெளியே தெரியவந்தது. அது வரையிலும் அவர் வெளியில் சொன்னதில்லை. தொண்டை குழாய்கள் முற்றிலும் அரித்துப் போக பேசமுடியாமல் குழறி குழறி சொன்னதெல்லாம் - தங்கைகளைப் பார்த்துக் கொள் என்பது மட்டுமே. இறுதிவரையிலும் உழைத்ததெல்லாம் பிள்ளைகளுக்காக மட்டுமே. அவர் தன்னுடைய தேவை - தன்னுடைய மகிழ்வு - என்று கருதியதெல்லாம் புகைபிடிப்பது மட்டுமே. மற்றபடிக்கு பெரும்பான்மையான சமயத்தில் உணவு - டீ மட்டுமே.

வேலையிலிர்ந்து ஓய்வு பெற்ற இரண்டே மாதங்களில் தன் வாழ்வை முடித்துக் கொண்டார். ஏனோ, உழைக்காமல் வாழப் பிடிக்காத மாதிரி.

இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் - சிகரெட்டை விட்டுத் தொலைக்க வேண்டும் என்ற போராட்டத்தில். ஆனாலும், சிகரெட்டின் ஆளுமை மிக அதிகமாகத் தான் இருந்தது. தந்தையின் மரணத்தைக் கூட தாண்டி தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் வல்லமை இருந்தது அதற்கு. அது தான் உண்மையா? நான் என் தந்தையின் மரணத்தை விட சிகரெட்டை அதிகமாக நேசித்தேனோ?

கண்டிப்பாக இருக்காது.

சுற்றிலும் நம்மைச் சுற்றி வாழும் இந்த உலகம் போகிற போக்கில், தனிமைப்பட்டு விடக்கூடாதே என்ற பயத்தில், அதையொட்டி வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அதீத எச்சரிக்கை உணர்வில், இந்த புறச்சூழலின் மதிப்பு மிக்க குறியீடுகளைஏற்றுக் கொண்டு வாழ்வது தான் உத்தமம் என்ற தவறான அனுமானத்தால், புகைப்பதை விட்டுவிடவேண்டும் என்பதை பெரிய அளவில் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆனால் இந்த புறச்சூழல் ஆக்கிரமிப்பு என்பது எத்தனை பெரிய சப்பைக்கட்டு என்பதை இப்பொழுது தான் அறிந்து கொள்கிறேன்.

புகைக்காமல் வாழ்வதும் ஒரு நாகரீகமாக மக்களிடையே இருக்கிறது. புகைத்து விட்ட புகையே என் கண்களை மறைத்து விட்டது என்பது தான் உண்மை.

முற்றிலுமாக சிகரெட் புகைப்பதை விடமுடியவில்லை என்றாலும் - குறைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். அதுவும் வாழ்க்கை சூழலுக்கு ஒத்த நிலைமையில் இருந்தது. அப்பொழுது நாங்கள் - வாடகை வீட்டில் இருந்தோம் - ஒரு அறை வீட்டில்.

நானும் என் மனைவியும் மட்டும் தான். ஒரு வருடத்திற்குள்ளாக வீட்டில் புதிதாக என் பையனும் வந்து விட, வேலைக்குச் செல்லும் என் மனைவி பையனப் பார்த்துக் கொள்ள, மாமா, மாமியையும் அழைத்து வாந்தார். "இனி, இவர்களும் நம்முடன் - மீதமுள்ள இவர்கள் வாழ் நாள் முழுவதும்" என்றதும் "சரி இருக்கட்டும்" என்றேன். அவர்கள் என் பையனுடன் ஹாலில். நாங்கள் அறையினுள். அதுவரையிலும் கழிவறையினுள் புகை. ஆனால், இப்பொழுது புகையுடன் புகாரும் கிளம்பியது. நாற்றமடிக்கிறது என்று. அதனால், வீட்டினுள் புகைப்பது கிடையாது என்று முடிவாகியது.

அதனால், குறையுமென்றா எதிர்பார்த்தீர்கள் - இல்லை, மாறாக, அடிக்கடி வெளியில் செல்லும் பழக்கம் தான் உண்டாகியது.

என்றாலும் ஒரே ஒரு பழக்கம் - குழந்தைகள் முன் சிகரெட் புகைப்பதில்லை என்று. இன்று வரையிலும் அந்த ஒன்றையாவது கடைப்பிடித்திருக்கிறேன் - ஆம் - இன்று வரையிலும் நான் புகைத்து என் பிள்ளைகள் பார்த்ததில்லை.

சில சமயங்களில் எரிச்சல் தோன்றும் - அதாவது வெளியே செல்லும் பொழுது. எப்படியாவது ஒரு சின்ன இடைவெளி கிடைக்காதா - ஒரு சிகரெட் புகைத்து விட என்று தோன்றும் பொழுதெல்லாம் - விடாப்பிடியாக தொற்றிக் கொண்டிருப்பார்கள்.

தலைவலிப்பது போல தோன்றும். அதெப்படி தலைவலியை எல்லாம் - இந்த சிகரெட், கா·பியுடன் இணைத்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு காலத்தில் கா·பி என்பதே பிடிக்காத சமாச்சாரமாக இருந்தது. அப்பொழுதெல்லாம் டீ தான். கா·பி பழகியது கர்நாடாக வந்த பின்னர் தான். அங்கு எல்லா கடைகளிலும் கா·பி நன்றாகப் போட்டார்கள். டீ சரியாகப் போடத்தெரியாது பெங்களூர்காரர்களுக்கு. அதனால், கா·பிக்கு மாறிவிட்டேன்.

அத்துடன் ஒவ்வொரு கா·பிக்கும்ஒரு சிகரெட். தலைவலிப்பது போல எல்லாம் சும்மா.. ஒரு சிகரெட் பிடிக்க வேண்டுமென்பதற்காக.

குடும்பத்தோடு வெளியே செல்ல வேண்டுமென்றால் இந்தப் பிரச்சினை ஒரு பெரிய தொல்லையாக இருந்தாலும் - குழந்தைகளோடு கப்பன் பார்க்கில் விளையாடும் அந்தப் பொழுதில் மட்டும்இந்தப் பழக்கம் அதிகமாக தொல்லை தராமல் ஒளிந்து கொண்டது. அதனால் பிழைத்தேன்.

இப்படியான ஒண்டு குடித்தன வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.

சொந்தமாக வீடு கட்டி குடியேறிய ஆகஸ்ட் 15, 2000ல்.

புத்தகங்கள் வாசிப்பதற்காக தனி அறை வசதியுடன் கட்டிய வீட்டில், என் புழக்கத்திற்கென மட்டுமே ஒரு தனி கழிவறை. மீண்டும், வீட்டினுள் புகைப் பழக்கம். அத்துடன் வீட்டினுள் தங்கும் பழக்கமும் அதிகமாயிற்று. எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நழுவிப் போய் மேலே படுக்கை அறையினுள் போய் நிம்மதியாக ஒரு சிகரெட். அதனால், முன்னைப் போல உர் உர்ரென்று இருப்பதில்லை. அடிக்கடி புகைக்க முடிவதால், இயல்பான நிலைமையில் இருக்க முடிந்தது.

எல்லோருக்கும் ஏன் என்று தெரியாது. எப்படி இயல்பாய் இருக்கிறான் என்று.
புரியாமலே அவர்கள் அடிக்கும் நக்கல் - 'பார்த்தீயா, வீடு கட்டினதும் பொறுப்பு வந்துடுச்சி - வரவங்ககிட்ட எப்படி நிதானமாய் நடந்துக்கறார் பார்.'

ஆக, எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் சமாதானமாகிவிட்டார்கள் - என் சிகரெட்டுடன்.

ஆனால், எனக்கு மட்டுமே எப்படியாவது இந்தப் பழக்கத்தை நிறுத்தி விடவேண்டும் என்று எண்ணங்கள் இருந்தது. அதே சமயம் அதை யாருடனும் சொல்ல வேண்டாம் என முடிவு பண்ணிக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் எல்லோரிடமும் சொல்வது - ஒரு மாதம்முடிவதற்குள் மீண்டும் ஆரம்பிப்பது - பிறகு யார் யாரிடமெல்லாம் சொன்னோமோ அவர்களைக் கண்டதும் தலைமறைவாவது என்றிருக்கக் கூடாது என முடிவு செய்து கொண்டேன்.

அப்புறம், அறிவுரைகள் வேறு வடிவங்களில் வரத் தொடங்கியது.

இம்முறை மருத்துவர்கள்.

'ஒன்று சிகரெட் பிடிக்காமல் நலமாக இருங்கள். அல்லது சிகரெட் பிடித்துக் கொண்டே, நாங்கள் கொடுக்கும் மாத்திரைகளை விழுங்கிக் கொண்டே இருக்க வேண்டும். வருடா வருடம் மாத்திரைகள் அதிகமாகும்'

ஆக, எது நடக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தேனோ அதை நோக்கியோ போய்க் கொண்டிருக்கிறேன்.

மாத்திரைகளின் தயவில் ஒரு வாழ்க்கை.

இதுவரையிலும் மாத்திரைகளை மருந்துகளை மிக அரிதாகத் தான் உபயோகித்திருக்கிறேன்.

இனி?

பெரும் கேள்வி தான். முன்னைப்போல விளையாட்டுத்தனமாக இதை அணுக முடியாது என்று தோன்றியது. நாம் நம் வாழ்க்கையில் வைத்திருக்கும் மதிப்பீடுகளைப் பற்றிய அளவுகோள்களை மாற்றியே ஆக வேண்டும்.

எந்த மாதிரியான அளவுகோல்கள்?

எதிர்ப்பாளான்.
பெண்களைக் கவரும் - கம்பீரமான ஆண்மை மிக்க தோற்றம் தரும்.
Style
high end living

சிகரெட்டின் ஆளுமைகளை அட்டவணை இடும் பொழுது தான் தெரிகிறது - அதில் எந்த வாழ்க்கை லட்சியமும் இல்லை. நாமாக உருவாக்கிக் கொண்ட மாயைகளைத் தவிர. நாம் மிகவும் மதிப்பவர்கள் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்ற மோகத்தைத் தவிர.

எதிர்ப்பாளன் - anti-establishment - நிறுவனமயமாக்கப்பட்டவற்றை எதிர்க்க வேண்டும் என்ற மூர்க்கம் - என்று தன் இயலாமையினால், என் கைகளைப் பற்றிக் கொண்டு என் தந்தை கண்ணீர் உகுத்தாரோ அன்றே காற்றோடு போய்விட்டது.

பெண்களைக் கவரும் - இனி கவர வேண்டிய அவசியமில்லாது போய்விட்டது. அழகான பெண்கள் எல்லாம் சிறு குழந்தைகளாகி வருவதைப் போன்ற தோற்றம். எல்லாம் எனக்கு வயதாகிக் கொண்டே போவதால் தான்.

கம்பீரமான ஆண்மை மிக்க தோற்றம் - இன்னும் பாக்கி உள்ள ஒரே காரணி. அதுவும் ரஜினி, ஷாருக் முதற்கொண்டு, ஹாலிவுட் வரை தொடரும் நாயகர்கள் - அல்லது சுருட்டு புகைக்கும் அரசியல் தலைவர்கள்... ஆனால் இப்பொழுது நாயக ரசிகத்தன்மை போய்விட வந்த தெளிவு.

ஸ்டைல் - இதுவும் சினிமாக்காரங்க, விளம்பரகாரங்க உபயம் தான்... இந்த வெத்துப் பந்தாவை இப்பொழுது தாண்டியாயிற்று...

மேல் தட்டு வாழ்க்கை - இது தான் இன்றைய முக்கிய காரணம். கா·பி - சிகரெட் - சிந்தனைகள் - மது - தளும்பும் கோப்பையுடன் அதே கையில் புகை கசியும் சிகரெட் - வளமான உணவு - உலகின் பல்வேறு ருசியுடன் வளமான உணவு - உண்ட திருப்திக்கு புகை - இந்த மயக்கங்கள் தான் விடுபடுவதற்கு சிரமமானதாக இருக்கும் - இருந்தது எனக்கு. அதுவும் அடிக்கடி கூடும் நண்பர்களுடன் - தொழிற் முறை நண்பர்களுடன். அங்கு பெரிதாக பிகு பண்ணிக் கொண்டிருக்க நேரமிருக்காது.

இந்த மேல் தட்டு வாழ்க்கை என்று எனக்கு நானே முடிவு செய்து வைத்திருந்த அந்த வாழ்க்கையுடன் போராடுவது தான் பெரிய காரியம். சிகரெட்டை விடமுடியாமைக்குக் காரணம் - நிக்கோட்டின் போதை மட்டுமல்ல. உடலின் திசுக்கள் அனுபவித்த போதை மட்டுமில்லை. மனம் மயங்கிய போதை. மேம்பட்ட வாழ்க்கை முறை என்ற போதையில் சிக்குண்டு கிடந்த மாயம். அதை எதிர்த்துப் போராடுவதில் தான் நான் தோற்கிறேன். இந்த மாய வாழ்க்கை முறையை வெல்வதில் தான் என்னை என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் வாழ்வை நான் பெறுவேன். எதை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற தெளிவு தான் ஒருவன் முதலில் அடைய வேண்டிய இலக்கு. பின்னர் தான் மற்ற போராட்டங்கள்.

போராடியே தீர்வது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டதும், ஏதோ கடவுளே கூட நம் துணைக்கு வந்தது போல -

வாழ்க்கைக் களத்தை மாற்றி அமைத்துக் கொடுத்தார்.

துபாய்க்கு வந்து சேர்ந்தேன். தெரிந்தே தான் வந்து சேர்ந்தேன் - இது ஒரு இஸ்லாமிய நாடு. இங்கு வாழ்க்கை முறை வேறு என்று தெரிந்து தான் வந்தேன். ஆனால் நான் எதிர்பார்த்த மாதிரி இது ஒன்றும் கட்டுப்பெட்டித்தனமான இஸ்லாமிய நாடல்ல. மாறாக உலகுடன் இணைந்து வாழ விரும்பும் இஸ்லாமிய நாடு என்று தெரிந்தது.

அட, இங்கும் கூட நான் சொன்ன புறச்சூழலில் இணைந்து கொள்ள துடிக்கும் வாழ்க்கை முறை தானா? வந்ததும் தெரிந்து கொண்டேன் - இங்கும் அனைத்தும் கிடைக்குமென்று.

மதுவிலிருந்து மங்கை வரை.

ஆனால் நான் இதற்காக இங்கு வரவில்லை.

இவற்றிலிருந்து விலகியே இருப்பேன்.

நல்ல வேளையாக சில சட்டங்கள் உதவி புரிந்தன. அந்த சட்டங்கள் எழுதிய அதே தொனியில் செயல்படுத்தப்படவில்லை என்றாலும், சட்டம் சட்டம் தானே - அதை மதிக்கத் தானே வேண்டும்.

அந்தச்சட்டம் - மது அருந்துவதை தடை செய்வது.

ஆம் - மது அருந்துவதை தடை செய்ததால் - வெளிப்படையான வாழ்க்கை முறையில் மது இல்லை. அதை ஒளித்து ஒளித்து தான் செய்ய வேண்டும். அல்லது பிரபலமான விடுதிகளுக்குப் போக வேண்டும். நிறைய செலவு செய்ய வேண்டும். மொத்தத்தில் அது எளிதான வாழ்க்கை முறையாக இல்லை. அதனால் நான் செய்த முடிவு - மது அருந்துவது இல்லை. அது அலுவலக விஷயமாக இருந்தாலும் சரி. மதுவை உணவோடு சேர்த்து தான் சாப்பிடுவது - அதுவும் நண்பர்களுடன் என்ற அளவில் வைத்திருந்ததால் அதை விடுவது ஒன்றும் அத்தனை கடினமாக இருக்கவில்லை. மேலும் இங்குள்ள நண்பர்கள் யாரும் மது அருந்துவதாயும் இல்லை.

ஆக, முதலில் விட்டது மது.

புகைப்பது மட்டும் தொடர்ந்தது. அதுவும் - கடந்த ஜூலை மாதத்தில் நிறுத்தப்பட்டது. அடாவடியான காய்ச்சலால் இரண்டு நாட்கள் படுத்துவிட, அந்த இரண்டு நாட்களும் புகைப்பதை நிறுத்த அதை அப்படியே தொடர்ந்து விட்டேன். வழக்கம் போல, இந்த முறையும் மனதில்தொடர்ந்த நச்சரிப்புகள் - ஆனாலும் அசைந்து கொடுக்கவில்லை. மீண்டும் தூண்டி விடும் வாய்ப்பாக புறச்சூழலும் அமையவில்லை - இறைவன் புண்ணியத்தில்.

ஆனாலும் மனம் மட்டும் இப்பொழுதும் திடும்திடுமென விழித்துக் கொள்ளும். பழைய வாழ்க்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக திருமபவும் போட்டுக் காட்டுகிறது. எங்காவது எப்பவாவது தென்படும் விளம்பரங்கள் தடுமாற வைக்கின்றன. சினிமா பார்ப்பதை சுத்தமாக விட்டது நல்லதாகப் போயிற்று. சிகரெட்டை அநாவசியமாகத் தூக்கிப் போட்டு ஸ்டைல் காட்டி அதை நடிப்பாகத் திணிக்காத மலையாளக் கரையோரம் ஒதுங்கியாயிற்று - சினிமா பார்க்க.

தொழில் முறையாக அரபிகளை சந்தித்தாலும் யாரும் குடிப்பவர்களில்லை. அவர்களுக்கு பார்ட்டி கொடுப்பதென்றால் வேடிக்கையாக இருக்கும். பாட்டில் பாட்டிலாக பெப்ஸி வேண்டும். முழுக்கோழிகளை அப்படியே தீயில் வாட்டி எடுத்து வரவேண்டும். அத்துடன் KFC. சுட்ட ஆட்டிறைச்சி. ரொட்டித் துண்டுகள். ரொட்டிகளெல்லாம் சும்மா ஊறுகாய் மாதிரி. கோழி தான் உணவு. ஆனால் மற்ற படிக்கு மது கிடையாது.

இறுதியாக,

சிகரெட்டை விடுவதற்கு முயற்சிப்பவராக இருந்தால், ஒரு வெள்ளைத் தாளில் எழுதுங்கள்,

எது அதி முக்கிய காரணம் என.

சும்மா நிக்கோட்டீன் என எழுதாதீர்கள். நிக்கோ ஒரு மாதத்திற்குள் துவண்டு விடும். ஆனால், அந்த மனம் இருக்கிறதே அது தான் படுமோசமான எதிரி. தவறான மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு உங்களிடம் தவறான வடிவில் போராடும்.

முதலில், உங்கள் மனம் உங்களிடத்தில் எந்த விதத்தில் முரண்பிடிக்கிறது என்று பாருங்கள்.

பின்னர் செயல்படுங்கள்

ஒரு முறை நிறுத்த முயற்சித்துத் தோற்றுவிட்டால் துவண்டு விடாதீர்கள். அடுத்த வருட முதல் தேதி இருக்கவே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அளவிலான கால அவகாசம் தேவைப்படும்

எனக்கு 25 வருடங்களாகி இருக்கிறது.

உங்களுக்கு அதற்கும் முன்னதாகவே வெற்றி கிட்டட்டும் என வாழ்த்தும்

நண்பன்.

Saturday, December 03, 2005

சிங்கப்பூரில் ஒரு மரணதண்டனை.....

வான் ங்வென்.

தன் சகோதரன் மீது அளவற்ற பாசம் கொண்டவன். அவன் கடன் தொல்லைகளால் அவதியுறுகிறான் என்று அறிந்ததும் துயருற்றான். எப்படியாவாது தன் சகோதரனை கடன் தொல்லையிலிருந்து மீட்டெடுக்க முயற்சித்தான். அதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழிமுறை தான் - அபாயகரமானது. சிங்கப்பூர் வழியாக போதை மருந்து கடத்திச் செல்லுவது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் தூக்கிலிடப்பட்டான். (ஷ்ரேயாவின் பதிவிலிருந்து அறிந்து கொண்டது.)

நானும் இந்த வழக்கைப் பற்றித் தினமும் படித்து வந்தேன்.
இது பற்றிய ஒரு விரிவான பதிவு எழுதலாம் என்றிருந்தேன். அது பற்றிய செய்தி உங்களால் இடப்பட்டுவிட்டது.

நேற்று இங்கு விடுமுறை. அதனால் செய்தித் தாள் வாசிக்கவில்லை.

மரணதண்டனை அதிக பட்சம் தான். அதுவும் அந்த மனிதனின் கதை சற்று பரிதாபமானது.

மேற்கத்திய நாடுகளில் குடியுரிமை பெற்றுவிட்டாலோ, அல்லது மேலை நாட்டின் குடிகள் என்றாலோ, தங்களுக்கு தனி மரியாதை தரப்படவேண்டும் என்ற எண்ணம் நிறைய மேல நாட்டவரிடமிருக்கிறது என்பது உண்மை. அதே போல தவறுகள் செய்தாலும் தங்களைத் தப்புவிக்க தங்கள் நாடு உதவும் என்ற தவறான எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.

இந்த மமதையினால், பலரும் ஆசிய சமூகங்களின் அரசியல் சட்டங்களைத் துளியும் மதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தங்களை ஒரு super man அளவிற்கு மதிப்பு கொடுக்கும் நாடுகளுக்கு அவர்கள் விரும்பிச் செல்கிறார்கள் - தவறுகள் செய்வதற்காக.

இந்தியாவின் பல புராதான சுற்றுலா தளங்களில், இந்த வகையான ஆசாமிகள் போதையைப் புகைத்து கண்கள் சொருகிக் கிடைப்பதைப் பார்த்திருக்கிறேன். (ஹம்பியில்.... ) அதுபோல, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்களின் நோக்கமும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
இப்படி சாரிசாரியாகக் கிளம்பி வரும் இவர்களுக்கு, அவர்களது நாட்டின் அரசுகள் குறைந்த பட்சம் அறிவுரைகள் சொல்லி இருக்க வேண்டும்.

அடுத்த நாட்டின் சட்டங்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு சிறிய குண்டு அங்கு, இங்கு வெடித்தாலே, உடனே travel ban என்று முழங்கி, இல்லாத பயங்களையெல்லாம் உண்டாக்கி, அந்த நாடே ஒரு தீவிரவாத நாடு போல காட்ட முயற்சிக்கும் இந்த நாடுகள் தங்கள் பிரஜைகள் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதில்லை.

அது மட்டுமல்ல, இந்த மேலை நாடுகள் சட்டபூர்வமாக வாதம் செய்வதை விட்டு விட்டு, மிரட்டலில் ஈடுபடுகிறார்கள். ஆஸ்திரேலியாவின் வர்த்தக அமைப்பு - சிங்கப்பூரை தீண்டத்தகாதாக ஆக்க முயற்சித்தது. பொருளாதார தடை விதிக்கப் போவதாக மிரட்டினர். இத்தகைய செயல்களுக்கு ஓர் அரசு பணிந்து போகாமல் இருப்பதே உத்தமம்.

தூக்கிலிடப்பட்டவரின் கதை சோகமயமானது தான். தாய் தன் மகனை அரவணைக்க முடியாமல், போனது கொடுமை தான். ஆனால் சட்டத்தின் முன் பாசம் தோற்கத்தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் - ஒவ்வொரு கைதியும் ஒரு கதையை உண்டாக்க முடியும். பாசத்தால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்ட ஒரு கதையை உருவாக்க முடியும்.

மரண தண்டனை வேண்டுமா, வேண்டாமா, என்பதைப் பற்றி விவாதிக்கலாம். ஆனால், சிங்கப்பூர், தன் நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தியது சரியா, தவறா என்று விவாதிப்பது தவறான அணுகுமுறையாகும்.

கடந்த இரு நாட்களுக்கு முன், அமெரிக்கா தனது 1000மாவது மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது - 1977லிருந்து.

சிங்கப்பூரின் மீது கடும் கோபத்திலிருக்கும் ஆஸ்திரேலியா அல்லது அதன் பத்திரிக்கைகள் - ஒரு வார்த்தையாவது கண்டித்திருப்பார்களா - அமெரிக்காவின் சட்டங்களை?

சட்டங்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அந்த நாட்டை விட்டு விலகிக் கொள்ளலாமே!!!