BloggerTopAd:

wow gold|wow powerleveling

நிகழ்வு

செய்திகளும் விமர்சனங்களும்.....

My Photo
Name:
Location: துபாய், அமீரகம், United Arab Emirates

Spiritualism is an intense personal experience of one's self with his own beliefs, conviction and finally with the truth he believes. --- நண்பன்

Saturday, December 03, 2005

சிங்கப்பூரில் ஒரு மரணதண்டனை.....

வான் ங்வென்.

தன் சகோதரன் மீது அளவற்ற பாசம் கொண்டவன். அவன் கடன் தொல்லைகளால் அவதியுறுகிறான் என்று அறிந்ததும் துயருற்றான். எப்படியாவாது தன் சகோதரனை கடன் தொல்லையிலிருந்து மீட்டெடுக்க முயற்சித்தான். அதற்காக அவன் தேர்ந்தெடுத்த வழிமுறை தான் - அபாயகரமானது. சிங்கப்பூர் வழியாக போதை மருந்து கடத்திச் செல்லுவது.

வெள்ளிக்கிழமை அதிகாலையில் தூக்கிலிடப்பட்டான். (ஷ்ரேயாவின் பதிவிலிருந்து அறிந்து கொண்டது.)

நானும் இந்த வழக்கைப் பற்றித் தினமும் படித்து வந்தேன்.
இது பற்றிய ஒரு விரிவான பதிவு எழுதலாம் என்றிருந்தேன். அது பற்றிய செய்தி உங்களால் இடப்பட்டுவிட்டது.

நேற்று இங்கு விடுமுறை. அதனால் செய்தித் தாள் வாசிக்கவில்லை.

மரணதண்டனை அதிக பட்சம் தான். அதுவும் அந்த மனிதனின் கதை சற்று பரிதாபமானது.

மேற்கத்திய நாடுகளில் குடியுரிமை பெற்றுவிட்டாலோ, அல்லது மேலை நாட்டின் குடிகள் என்றாலோ, தங்களுக்கு தனி மரியாதை தரப்படவேண்டும் என்ற எண்ணம் நிறைய மேல நாட்டவரிடமிருக்கிறது என்பது உண்மை. அதே போல தவறுகள் செய்தாலும் தங்களைத் தப்புவிக்க தங்கள் நாடு உதவும் என்ற தவறான எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.

இந்த மமதையினால், பலரும் ஆசிய சமூகங்களின் அரசியல் சட்டங்களைத் துளியும் மதிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், தங்களை ஒரு super man அளவிற்கு மதிப்பு கொடுக்கும் நாடுகளுக்கு அவர்கள் விரும்பிச் செல்கிறார்கள் - தவறுகள் செய்வதற்காக.

இந்தியாவின் பல புராதான சுற்றுலா தளங்களில், இந்த வகையான ஆசாமிகள் போதையைப் புகைத்து கண்கள் சொருகிக் கிடைப்பதைப் பார்த்திருக்கிறேன். (ஹம்பியில்.... ) அதுபோல, இந்தோனேஷியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர்களின் நோக்கமும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
இப்படி சாரிசாரியாகக் கிளம்பி வரும் இவர்களுக்கு, அவர்களது நாட்டின் அரசுகள் குறைந்த பட்சம் அறிவுரைகள் சொல்லி இருக்க வேண்டும்.

அடுத்த நாட்டின் சட்டங்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு சிறிய குண்டு அங்கு, இங்கு வெடித்தாலே, உடனே travel ban என்று முழங்கி, இல்லாத பயங்களையெல்லாம் உண்டாக்கி, அந்த நாடே ஒரு தீவிரவாத நாடு போல காட்ட முயற்சிக்கும் இந்த நாடுகள் தங்கள் பிரஜைகள் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதில்லை.

அது மட்டுமல்ல, இந்த மேலை நாடுகள் சட்டபூர்வமாக வாதம் செய்வதை விட்டு விட்டு, மிரட்டலில் ஈடுபடுகிறார்கள். ஆஸ்திரேலியாவின் வர்த்தக அமைப்பு - சிங்கப்பூரை தீண்டத்தகாதாக ஆக்க முயற்சித்தது. பொருளாதார தடை விதிக்கப் போவதாக மிரட்டினர். இத்தகைய செயல்களுக்கு ஓர் அரசு பணிந்து போகாமல் இருப்பதே உத்தமம்.

தூக்கிலிடப்பட்டவரின் கதை சோகமயமானது தான். தாய் தன் மகனை அரவணைக்க முடியாமல், போனது கொடுமை தான். ஆனால் சட்டத்தின் முன் பாசம் தோற்கத்தான் செய்ய வேண்டும். இல்லையென்றால் - ஒவ்வொரு கைதியும் ஒரு கதையை உண்டாக்க முடியும். பாசத்தால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்ட ஒரு கதையை உருவாக்க முடியும்.

மரண தண்டனை வேண்டுமா, வேண்டாமா, என்பதைப் பற்றி விவாதிக்கலாம். ஆனால், சிங்கப்பூர், தன் நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தியது சரியா, தவறா என்று விவாதிப்பது தவறான அணுகுமுறையாகும்.

கடந்த இரு நாட்களுக்கு முன், அமெரிக்கா தனது 1000மாவது மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது - 1977லிருந்து.

சிங்கப்பூரின் மீது கடும் கோபத்திலிருக்கும் ஆஸ்திரேலியா அல்லது அதன் பத்திரிக்கைகள் - ஒரு வார்த்தையாவது கண்டித்திருப்பார்களா - அமெரிக்காவின் சட்டங்களை?

சட்டங்களை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இல்லையென்றால், அந்த நாட்டை விட்டு விலகிக் கொள்ளலாமே!!!

10 Comments:

Blogger ஜோ/Joe said...

நண்பன் ,
சரியாத் தான் சொல்லியிருக்கீங்க.
(பின்னூட்டப் பெட்டில popup-ஐ தூக்கக் கூடாதா? ரொம்ப நேரமாகுது)

11:00 AM  
Blogger நண்பன் said...

ஜோ, மிக்க நன்றி.

(பின்னூட்டப் பெட்டில popupஐ தூக்குவது? பார்க்கிறேன்)

11:59 AM  
Blogger நல்லடியார் said...

நண்பன்,

இஸ்லாமிய நாடுகளில் கொடூரக் குற்றங்களுக்கு மரணதண்டனைகள் நிறைவேற்றப்படும் போது இஸ்லாத்தையும், ஷரீஅத் சட்டத்தையும் கண்ணை மூடிக்கொண்டு திட்டித் தீர்ப்பவர்கள், அமெரிக்கா, சிங்கப்பூர், சீனா, போன்ற நாடுகளில் இவை செயல்படுத்தப்படும்போது மெளனமாக இருந்து தங்கள் நடுநிலையை பறை சாற்றிக் கொள்வர்.

போதைப்பொருள் உட்கொள்வதும், விநியோகிப்பதும் உலக நாடுகளில் மரண தண்டனைக்குறிய குற்றமாகக் கருதப்படும்போது அதை விடக் கொடுமையான கற்பழிப்பும், கொலையும் இவர்களின் காமாலைக் கண்களுக்கு மன்னிப்பிற்குறிய சாதாரணக் குற்றங்களாகத் தெரியும்.

மரணதண்டனைக்கு அமெரிக்காவில் "உள்நாட்டு பாதுகாப்பு" என்றும் மற்ற இஸ்லாமிய நாடுகளில் "காட்டுமிராண்டித்தனம்" என்று இருவேறு பெயர்கள் உண்டு!

12:10 PM  
Blogger துளசி கோபால் said...

சொன்னது ரொம்பச் சரி நண்பரே!

எந்த நாட்டுக்குப் போனாலும் அங்கிருக்கற சட்டத்தை மதிக்கறதுதானே முறை.

இந்தியாவுலே செஞ்சேன்னு இங்கேயும் வந்து துப்பினா எப்படி?

இதுக்கெல்லாம் மீடியாதான் பயங்கர பப்ளிசிடி கொடுத்து ஆடுது.

12:30 PM  
Blogger மணியன் said...

ஆஹா, இதுவே ஒரு இந்தியராக இருந்திருந்தால் நமது தொலைகாட்சிகளுக்கு எத்தனை ஃபுட்டேஜ் கிடைத்திருக்கும்.. தூக்கில் போடப்படுபவரின் சுற்றத்தினரின் மற்றும் கிராமத்தினரின் நேர்முகமங்கள், போடுபவரின் நேர்முகம், வக்கீல்களின் வாதங்கள் .. ம்ம் எல்லாம் போச்சே :)
P.S: Sorry for the black joke :(

6:17 PM  
Blogger நண்பன் said...

நன்றி நல்லடியார்

எப்பொழுதுமே வளர்ந்து விட்ட நாடுகள் தங்களுக்கென்று ஒரு நியாயமும், பிறருக்கென்று ஒரு நியாயமும் பேசுவது வழக்கம் தானே?

அவர்கள் விட்டெறியும் டாலர்களுக்கு வாலாட்டுவதற்கென்று ஒரு கூட்டம் எப்பொழுதும் உண்டு.

அவர்களைப் புறக்கணித்து விட்டு, நம் வழியில் செல்வதே நமக்கு நல்லது.

9:14 PM  
Blogger நண்பன் said...

நன்றி, துளசி கோபால்.

ஒவ்வொரு நாட்டிற்கும் நாம் போகும் பொழுது, நாம் தான் அந்த நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்க வேண்டுமே தவிர, நான் வருகிறேன் - எனக்காக உன் நாட்டு சட்ட திட்டங்களை மாற்றிக் கொள் என கேட்பது அநியாயம். அடிப்படை மனித உரிமைகளப் பாதிக்காத வகையில் எந்த நாடும் எந்த வகையிலும் சட்டம் வைத்துக் கொள்ள உரிமை உண்டு.

அவற்றை அனுசரிப்பது தான் அனைவரின் கடமையாகும்

9:19 PM  
Blogger நண்பன் said...

மணியன் உங்கள் வருகைக்கு நன்றி

அங்கும் செய்திருப்பார்கள்.

துபாயிலிருக்கும் பத்திரிக்கைகளே தினமும் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டன என்றால் - பிறகு உள்ளூர் பத்திரிக்கைகள் செய்யாமலிருந்திருப்பார்களா?

9:26 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

below is my reply to your comment in "mazhai".

நண்பரே, நீங்கள் சொல்வதுடன் நான் உடன்படுகிறேன்.

//அதே போல தவறுகள் செய்தாலும் தங்களைத் தப்புவிக்க தங்கள் நாடு உதவும் என்ற தவறான எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.//

அதே. அதுதான் இன்னொரு நாட்டுக்குப் போய் அந்நாட்டுச் சட்டதிட்டங்களை abuse பண்ணலாமென எண்ண வைக்கிறது. எந்த நாடென்றாலும் தனது இறைமையைப் பாதுகாக்க, ஒழுங்கை நிலைநட்டத்தான் சட்டம் வைத்திருக்கிறது என்பது பற்றிப் பலரும் சிந்திப்பதில்லை. இங்கே பரவலான கருத்தும் அப்படித்தானிருக்கிறது. இந்த எண்ணந்தானே சிங்கப்பூருடனான வர்த்தகத் தொடர்புகளைத் துண்டிக்கச் சொல்லிக் கேட்கத் தூண்டியது? மக்களின் இப்படிப்பட்ட கருத்துக்குப் பிரதமர் ஜோண் ஹவார்ட் அளித்த பதில்:
I have told the prime minister of Singapore that I believe it will have an effect on the relationship on a people-to-people, population-to-population basis."

The prime minister said he felt sympathy for Nguyen's mother, and had been disappointed by Singapore's "clinical response" to Australia's request that she be allowed to hug her son before his death. The Singapore authorities had only allowed them to hold hands.

But Mr Howard has rejected calls for trade and military boycotts against Singapore, one of Australia's strongest allies in Asia. (சிங்கப்பூரை வர்த்தக ரீதியாக boycott பண்ணுதல் வெற்றியளிக்காது. உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திலே இந்தப் புறக்கணிப்புக்கு இடமுமில்லை. தனிப்பட்ட புறக்கணிப்புகள் வேண்டுமானால், கொஞ்ச நாளைக்கு இடம்பெறலாம்..ஆனால் மனித இயல்பின்படி, பழையது மறந்து போகையில்??)

He (prime minister) added that the execution should serve as a warning to other young Australians.

"Don't imagine for a moment that you can risk carrying drugs anywhere in Asia without suffering the most severe consequences," he said.

வான் ஙுவெனும் சரி, ஷப்பெல் கோர்பியும் சரி, அவுஸ்திரேலியர்கள் என்றுதான் பொது மக்களால் பார்க்கப்பட்டார்கள்; அவர்கள் செய்தது பின்தள்ளப்பட்டது. ஒரு அவுஸ்திரேலியரை எப்படி இன்னொரு நாடு தண்டிக்கலாமென்பதே அவர்கள் சிந்தனை. ஒரு அவுஸ்திரேலியர் போய் எப்படி இன்னொரு நாட்டுச் சட்டத்துக்குப் புறம்பாக செயற்படலாம், அந்நாட்டுச் சட்டத்தை மீறலாம் என்பது பற்றி யோசிப்பதில்லை.

என்னைப்பொறுத்தவரையில், வான் ஙுவென் செய்தது தவறு. தண்டை பெற்றது சரி. அளிக்கப்பட்ட தண்டனை மிக அதிகம்.கொடூரமானதும் கூட.

அமெரிக்கச் சட்டங்களைப்பற்றிக் கதைத்தார்கள் - மேலோட்டமாக. ஆழத்துக்குப் போக மாட்டார்கள் - இங்கே அரசு தொடக்கம் ஊடகம் வரை எல்லாமே அமெரிக்க சார்புடையன (என்பது எனது கருத்து).

5:23 AM  
Blogger நண்பன் said...

நன்றி ஷ்ரேயா -

சிங்கப்பூர் பொருளாதார ரீதியாக வலுவான நிலையிலிருப்பதால், மற்ற நாடுகளால் அதைப் புறக்கணிக்க இயலாத நிலை. இதுவே ஒரு சாதாரணப்பட்ட நாடாக இருந்தால் - நிச்சயம் செய்திருப்பார்கள்.

எப்படியோ -

இறந்து போனவருக்கு அஞ்சலிகள்.

9:47 PM  

Post a Comment

<< Home