பிராமணரல்லாதோரும் - பிராமணர்களும் - சில பதில்கள்
கருணாநிதியின் கூற்று......
கருணாநிதி தவறாக எதுவும் கூறிவிடவில்லை. இன்னும் சொல்லப்போனால், சுகாசினி பேசிய அநாகரீகப் பேச்சை முதலிலே கண்டித்திருக்க வேண்டும்.
சுகாசினிக்கு ஆதரவாக குரல் எழுப்பிய ஞாநி சொல்கிறார் - "உங்கள் தலையில் கொம்பு முளைத்திருக்கிறதா என பாருங்கள் - இல்லை அல்லவா? பின் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள்? அமைதியாக இருக்க வேண்டியது தானே?" என்கிறார்.
ஒரு LKG குழந்தை கூட தன் வாதங்களை இந்தக் காலத்தில் சற்று திறம்பட வைக்கும்.
அது சரி, ஞாநி கூறிய கூற்றின் உட்பொருள் என்ன?
ஒரு காலத்தில் - உங்களையெல்லாம் கொம்பு முளைத்த அரக்கர்களாகத் தான் சித்தரித்து வைத்திருந்தோம். ஆழ்மனதில் ஊட்டி வளர்க்கப்பட்ட இந்த ஆபாசத்தை அறிந்தோ - அறியாமலோ பேசிவிட்டார் என்று ஞாநி ஒப்புக் கொள்கிறார்.
இதைத் தான் கலைஞர் சொன்னார் -
இந்த தர்க்கம் பிராமணர் பிராமணர் அல்லாதோர் என்ற பாதையில் திரும்புகிறது என்ற தனது கருத்தை வெளியிட்டார். இதில் என்ன தவறு கண்டீர்கள்? ஒரு வலைப்பூவைப் போட்டுக் கொண்டு கருத்து சொல்லவும் எழுதவும் உங்களுக்கும், நமக்கும் உரிமை இருக்கும் பொழுது அவருக்கும் உரிமை இருக்குமல்லவா?
அதற்காக கலைஞர் மீது வரிந்து கொண்டு பாய்வது தவறு.
பிராமண எதிர்ப்பு அரசியல் எடுபடாது - அப்படி எடுத்தால் தோற்றுப் போவீர்கள் என்கிறீர்கள். ஒருவேளை அவர் பிஜேபி போடும் தூண்டில்களுக்கு இசைந்திருந்தால் - அவருடைய பிராமண ஆதரவு அரசியலை ஆதரித்து இருப்பீர்கள் அல்லது மௌனமாக இருந்திருப்பீர்கள். அரசியல் களத்தில் ஓட்டுகளுக்காக மட்டுமே இடம் மாறிக் கொள்வதைப் பற்றி இன்று மக்கள் எந்தக் கவலையும் படவில்லை. அதனால் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விட, எங்கிருந்தாலும் எந்த அளவிற்கு தங்கள் இனத்திற்கு பயன் தரும் வகையில் கட்சிகள் இயங்குகின்றன என்று தான் மக்கள் பார்ப்பார்கள்.
மருத்துவர் ராமதாசின் கட்சி சாதியக் கட்சி.
இருக்கட்டும்.
அவர் அவர் சார்ந்த சாதிக்காகப் பாடுபட்டு, வெற்றியும் பெற்று, இன்று தன் தளங்களை விரிவுபடுத்தி மற்ற மக்களிடமும் போய்ச் சேர வேண்டும் என்ற அவாவில் இயங்குகிறார். ஆனால், பிஜேபி என்ன செய்தது? பிராமணர் கட்சி தானே? நாட்டில் நிலவி வந்த அமைதியான சூழலை குழி தோண்டி புதைத்தது. எங்கும் கொலைவெறித் தாண்டவமாடியது. அது மட்டும் சாதிக் கட்சி இல்லையா? பால் தாக்கரே சாதிக்கட்சி நடத்த வில்லையா? இவர்கள் எல்லோரும் புனிதத்தில் தங்கள் கட்சியை நீராட்டுகிறார்களா? ஆட்சியைப் பிடிக்கத்தானே இவர்கள் அரசியல் கட்சி நடத்துகிறார்கள்? - சாதியத்தை முன் வைத்து.?
பாமக - தங்கள் இலக்கில் தேசிய சாதிக்கட்சிகளை விட தெளிவாகவே இருக்கிறார்கள். ஆட்சியைப் பிடிப்பதை விட, அதிக பட்ச சலுகைகளைப் பெறுவதிலே தான் அவர்கள் இலக்கு இருக்கிறது. ஒரு சமூகம் தான் அடைய வேண்டிய பயன்களைப் பெற போராடுவதில் தவறில்லை.
பாமக கட்சி அரசை நோக்கித் தான் போராட்டத்தைத் துவங்கியது. பிராமணர்களை நோக்கி அல்ல. பிராமணர்கள் வெறும் விமர்சகர்களாக இருந்து கொண்டு, அங்கும் இங்கும் பகை தூண்டி குளிர் காயும் வேலையைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை யாரும் பொருட்படுத்த வேண்டிய அவசியமற்ற சூழ்நிலை நிலவி வந்த பொழுது தான், ஜெயலலிதாவின் ஆட்சி வந்தது.
Blood is thicker than water என்பார்கள். அதன் வாழும் உதாரணம் - ஜெ. மீண்டும் பிராமணர்கள் துளிர்விட ஆரம்பித்தார்கள். அவர்கள் துளிர்விடும் பொழுதே அதற்கான எதிர்ப்பும் துளிர் விடத்தான் செய்கின்றன. என்றாலும் அவற்றைக் காட்டி போராட வேண்டிய அவசியமில்லாது போய் விட்டது - காரணம் - இங்கு ஒவ்வொருவரும் தங்கள் இருப்பை - பிற சாதிகளின் இருப்புடன் ஒப்பீடு செய்து, அதை சமன் செய்யும் முயற்சியில் இறங்கி விட்டனர். பிராமண எதிர்ப்பு என்பது நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது - ஊதிவிட தேவையேற்படாமல்.
இந்த சாதியக் கட்சிகள் தங்கள் பலத்தை மற்றவர்களுடன் சமன் செய்யும் முயற்சியில் இறங்கிய பொழுது நிகழ்ந்தவை தான் வன்னிய-தலித் மோதல்கள் - வடக்கே. முக்குலத்தோர் - தலித் மோதல்கள் தெற்கே. கிட்டத்தட்ட இப்பொழுது ஒவ்வொருவரும் தங்கள் பலத்தின் - வலிமையின் தன்மையை உணர்ந்த பின்பு - இப்பொழுது அவற்றைக் கொண்டு மேலும் தங்கள் மக்களுக்கு என்ன பயன்கள் கிட்டச் செய்யலாம் என்ற தளத்தில் இயங்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு பிராமண எதிர்ப்பு என்ற ஆயுதத்தை விட தங்களுக்கு என்ன பயன்களை அரசிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும் என்ற பேரத்தில் தான் கவனமிருக்கிறது.
இதனாலேயே அவர்கள் கூட்டணி மாறிக் கொள்ள கூட தயங்கவில்லை. ஒரு தனிப்பட்ட தலைவர் தான் ஒரு கொள்கையாளன் என்ற பட்டம் பெறுவதை விட, தான் சார்ந்த மக்கள் பயன் பெற வழி வகை என்ன என ஆரம்பித்து அதை செயல்படுத்துவது தான் முக்கியம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது சமீப காலங்களில், சிறந்த தலைவராக பாராட்ட வேண்டுமென்றால் - அது ராமதாசாகத்தான் இருக்கவேண்டும். பாருங்கள் - இஸ்லாமியர்கள் கூட இந்தக் கருத்தைப் புரிந்து கொண்டு ஜெ. விடம் பேசுகிறார்கள் எங்களுக்கு இடஒதுக்கீடு கொடுங்கள் - அடுத்த தேர்தலில் உங்களுக்கே ஓட்டு போடுகிறோம் என்று. காலம் தாழ்ந்த அரசியல் விழிப்பு என்றாலும், இப்பொழுதாவது வந்ததே என்பது தான் முக்கியம். அது போல திருமா கூட ஜெ.வின் பக்கம் போக வாய்ப்பிருக்கிறது - அவர் சார்ந்த மக்களுக்கு, சிறந்த பயன்களைப் பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்.
இப்படியான இயங்கு தளத்தில் - பிராமண எதிர்ப்பை எல்லோரும் பின்னுக்குத் தள்ளிவிட்டனர். ஈனஸ்வரத்தில் முழங்கும் பிராமணர்களை விட மற்றவை அவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஆனால் ஜெ., பிஜேபி போன்றவர்களின் வரவு, சங்கராச்சாரியார் போன்ற கறை படிந்த துறவிகளுக்குக் கொடுக்கப்பட்ட - அரசியல் நிர்ணயச் சட்டங்களுக்கு அப்பாற்பட்ட அதிகாரம் - இவை மீண்டும் மக்களை விழிப்படையச் செய்து விட்டது.
சங்கராச்சரியாருக்கு ஆதரவாக மக்கள் எங்குமே கொதித்து எழவில்லை என்பதே பிராமண எதிர்ப்பு எத்தகைய வலுவான நிலையிலிருக்கிறது என்பதை உணர்த்தும்.
1950 களில் எடுபட்டது இன்றும் எடுபடும். ஏனென்றால் இந்தப் போராட்டம் - வெறும் 1950களில் தொடங்கப் படவில்லை... அவை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வருகிறது.
என்று பலகோடி மக்களை இழிவுபடுத்தும் வகையாக அவர்கள் பேசும் மொழியை இழித்தும் பழித்தும் பேசினார்களோ - பேசுகிறார்களோ - பேசுவார்களோ - அதுவரையிலும் பிராமண எதிர்ப்பு என்பதே கனன்று எரியத்தான் செய்யும்.
இந்த எதிர்ப்பை, தர்க்கத்தை - ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வெறும் எதிர்ப்பாக மட்டுமல்ல - தங்களுக்குள் இருக்கும் சாதி வேறுபாடுகளையும் வர்க்க வேறுபாடுகளையும் களைந்தெடுக்கவும், பகுத்தறிவு வழியில் மேலும் விரைந்து செல்லவும், பெண்களின் உண்மையான விடுதலைக்காக போராடுவதற்காகவும் இந்த எதிர்ப்பு உணர்வை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சங்கராச்சாரியார் இந்த பிராமண எதிர்ப்பை ஊதிப் பெரிதாக்கி கொழுந்து விட்டெரியச் செய்தார் என்றால், சுகாசினி அதில் எண்ணெய் ஊற்றி இருக்கிறார். இன்னும் இன்னும் இந்தப் போராட்டங்கள் முன்னே செல்லுமே தவிர இதில் பின்னடைவு வருவதற்கு சாத்தியதை இல்லை.
என்றாலும், இந்தப் போராட்டங்கள் - நாகரீகமாக நடத்தப்பட வேண்டும். இதில் பிராமண எதிர்ப்பை முன்னிறுத்தும் தலைவர்கள் வெற்றி பெற்றால், தமிழ் உணர்வாளர்கள் எதிர்பார்க்கும் - ஆலயங்களில் தமிழ் உட்பட பல எதிர்பார்ப்புகளும் எளிதாக நிறைவேறிவிடும்.

10 Comments:
பா.ஜ.க வுடன் முதலில் கூட்டணி கண்டது அதிமுக, மதிமுக, பா.ம.க.
அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது.பின்னர் திமுக அக்கூட்டணியில் இணைந்தது. ஆட்சியைப் பகிர்ந்து கொண்டு இந்த்துவத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு அவ்வப்போது பெயருக்கு எதிர்த்தவைதான் இந்த கட்சிகள். கொள்கையை காற்றில் பறக்க விட்டவர்களுக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் பா.ஜ.க வை ஏன் திட்ட வேண்டும். பா.ஜ.க பார்ப்பனர் கட்சி என்பது பொருந்தாது. இப்போது பாஜகவின் முக்கிய பலம் பிற்படுத்தப்பட்ட
ஜாதிகள்தான். பாஜக வின் இரண்டாம் நிலை தலைவர்களில் பிற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். சந்தர்ப்பவாத அரசியலை எப்படி வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம், சமூக நீதிக்காக என்று சொல்லலாம். கட்சி நடத்துவது சலுகைகளைப் பெற என்றால் ஏலம் விட்டுவிடலாம் - யார் நாங்கள் கேட்டதை தருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு என்று. பெரியார், அம்பேத்கார் பெயரை உச்சரிக்கத் தேவையில்லை. சுகாசினி கூறியது அனைத்து தமிழர்களையும் குறித்துத்தான். அதை குதர்க்கமாக நீங்கள் புரிந்து கொண்டால் யார் என்ன செய்ய முடியும்.
எந்த வன்முறையையும், சந்தர்ப்பவாத அரசியலையும் ஏதோ ஒரு காரணம் காட்டி சரி என்று சொல்ல முயற்சிக்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை கருணாநிதியும், ராமதாசும் கவலையின்றி ஏதோ ஒன்றின் பெயரில் ஏமாற்றிக் கொண்டு யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்.
(நண்பர் ரவி ஸ்ரீநிவாஸின் பின்னூட்டம். ஏனோ மொடரேட்டிலிருந்து இங்கு வரமாட்டேனென்கிறது. அதனால் தான் இந்த கட் & பேஸ்ட். நண்பர் மன்னிக்கவும். இதில் ஒரு வார்த்தை கூட திருத்தப்படவில்லை. அவருக்கு திருப்தி இல்லையென்றால் மீன்ண்டும் பதிக்கவும்.
அன்புடன்
நண்பன்.
நண்பன், உங்களின் இந்தப்பதிவு வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க வைக்கிறது. நன்றி.
முதலில் கேட்க நினைத்து மறந்தது....
//சுகாசினி பேசிய அநாகரீகப் பேச்சை முதலிலே கண்டித்திருக்க வேண்டும்.//
சுகாஷினி எதைப்பற்றி, எங்கே அநாகரீகமாய்ப் பேசினார்?
//பா.ஜ.க பார்ப்பனர் கட்சி என்பது பொருந்தாது. இப்போது பாஜகவின் முக்கிய பலம் பிற்படுத்தப்பட்ட
ஜாதிகள்தான். பாஜக வின் இரண்டாம் நிலை தலைவர்களில் பிற்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.//.
நண்பர் ரவிஸ்ரீனிவாஸிற்கு மிக அற்புதமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. பா.ஜ.கவின் முக்கிய பலம் மற்றும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்தான் என்றூம் சொல்லி இருக்கிறார். நானும் மறுக்கவில்லை. அந்த பிற்படுத்தப்பட்ட இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் பலியாடுகளாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்...
அப்படி பலியாடுகளை பட்டியலிட்டால் அது தனிப்பதிவாகத்தான் போட வேண்டும். பங்காரு லட்சுமணன், கல்யான்சிங், உமாபாரதி, கிருபாநிதி என பட்டியல் நீளும். அதிலும் குறிப்பாக உமாபாரதியின் உழைப்பால் மத்திய பிரதேசத்தில் வென்று விட்டு அவரை பலிகாடாக்கி விட்டார்கள்.
கோடிகளில் கமிசன் வாங்கும் மகாஜன்கள் காப்பாற்றப்பட்டு லட்சம் அதுவும் கட்சிக்காக வாங்கிய பங்காருவை பலிகடாவாக்கியது என சொல்லிக்கொண்டே இருக்கலாம். என்னை ஒரு மனிதனாகக் கூட நடத்தவில்லை என்று கிருபாநிதி கண்ணீர் பேட்டி கொடுத்ததுவரை
பா.ஜ.க தெளிவாகத்தான் இருக்கிறது. அரியணைகள் ஏற பிற்படுத்தப்பட்டவர்கள் தேவை. ஆனால் ஆளும் உரிமை உயர் சாதியினருக்கு மட்டும்தான். இதைத்தான் நாங்களும் சொல்லி வருகிறோம். பார்ப்பனியத்தின் குணமும் அதுதானே. அடுத்தவன் முதுகில் சவாரி செய்வது. தூக்கி வந்தவனை எட்டி உதைப்பது.....
ரவி ஸ்ரீநிவாஸ்,
உங்களின் முந்தைய பதிவுகளையெல்லாம் நான் படித்ததில்லை. இனிமேல் தான் படிக்க வேண்டும்.
என்றாலும் உங்களுடைய பின்னூட்டத்திலிருந்து ஒன்றைத் தெரிந்து கொண்டேன் -
உங்களுக்கு நகைச்சுவை உணர்வும், வரலாற்றைப் பின்னிலிருந்து தலைகீழாகப் பார்க்கும் வழக்கமும் உண்டு என்று.
நன்று.
தமிழ் அரசியல் உலகில் அரிச்சுவடி கற்றுக் கொள்ளும் மாணவன் கூட சொல்லி விடுவான் - திராவிட கட்சிகளின் தோள் மீதேறி பயணம் செய்யத் துடிக்கும் டெல்லி கட்சிகளின் நிலைமையை.
ஆனால், உங்கள் பார்வையில் பி.ஜெ.பி யுடன் கூட்டு வைத்துக் கொள்ள திமுகவும், அதிமுகவும் போயிற்றா? அது தான் சொன்னேன். வெளவால்கள் மாதிரி வரலாற்றைப் படிக்கக் கூடாது.
மேலும் பி.ஜெ.பி பார்ப்பனர் கட்சி அல்ல என்கிறீர்கள். இதை பார்ப்பனர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனால் இதை விட்டுவிட்டு அடுத்த கட்ட தலைவர்களைப் பார்க்கலாம்.
இரண்டாம் கட்ட தலைவர்களாக மற்ற சாதியினரும் உண்டு.
நன்றி.
உண்மைகளை இத்தனை நேர்மையுடன் துணிவுடன் ஒத்துக் கொண்டமைக்கு -
இரண்டாம் கட்டத்தில் தான் வைப்பீர்கள் - முதல் கட்டத்திற்கு வரவிடமாட்டீர்கள்.
அதைத்தான் நாங்களும் காலம் காலமாக சொல்லிக் கொண்டு வருகிறோம் -
இவர்களுக்கு ஏவல் செய்வதற்கு தான் ஆள் தேவையிருக்கிறதே தவிர, சம உரிமைகளைக் கொடுத்து தழுவிக் கொள்ளும் எண்ணமெல்லாம் கிடையாது என்று.
அதை நீங்களும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது.
சந்தர்ப்ப வாத அரசியலை எப்படி வேண்டுமானாலும் நியாயப்படுத்தலாம் -
ஆமாம் - பி.ஜெ.பி யின் சந்தர்ப்ப வாத அரசியலை.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுக அம்மாவுக்கு பல்லக்கு தூக்கிய ரத்தபாச அரசியலை எப்படி வேண்டுமானாலும் நீங்கள் நியாயப்படுத்துவீர்கள்.
ஆனால், மற்ற இன மக்கள் தங்கள் சாதிக்கான பயன்களுக்கான போராட்டத்தை நீங்கள் கொச்சைப்படுத்துவீர்கள்.
தங்களுக்கு - தங்கள் சாதிக்கு என்ன பயன் - என்பது தான் கட்சியின் கொள்கையாக இயங்கும் பொழுது அந்த கொள்கைகளை அடையத் தான் போராடுகிறார்கள். அல்லாமல், பறக்க விடுவதற்காக அல்ல.
பின்னர் எழுதியதை முற்றிலுமாகப் படித்து விட்டு - எழுதுங்கள்.
வன்முறையை எந்த ஒரு இடத்திலும் ஆதரித்து எழுதவில்லை. இன்னும் சொல்லப்போனால், போராட்டங்களே நாகரீகமாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சொல்லியுமிருக்கிறேன். அனுமானித்து எழுதுவதினால், அது உண்மையாகி விடாது.
//"உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை கருணாநிதியும், ராமதாசும் கவலையின்றி ஏதோ ஒன்றின் பெயரில் ஏமாற்றிக் கொண்டு யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம். "// இந்திய அரசியல் முழுவதும் இன்று கூட்டணிகளால் தான் நடத்தப்படுகின்றன. அப்படியிருக்கும் பொழுது, ராமதாசும், கருணாநிதியும் மட்டுமே கூட்டணிக்காக அலைகிறார்கள் என்று எழுதுவது உங்களின் அரசியல் பார்வை தெளிவற்று இருப்பதை காட்டுவதோடு - உங்கள் மனதின் உண்மை நிலையையும் பிரதிபலிக்கிறது. இன்று அம்மாவிலிருந்து, முகமூடி கட்சிகளிலிருந்து, அனைவரும் கூட்டணி இல்லையேல் அம்பேல் தான். ஏன், கடவுளே இறங்கி வந்து தேர்தலில் போட்டியிட நிற்கிறார் என்றால் கூட, தொண்டர் பலத்திற்காக கூட்டணி வைத்துக் கொண்டு தான் செயல்படுவார்.
இனி, ராமதாசு அவர்கள் கூட்டணிக்காக அலைய வேண்டியதில்லை.
ஏனென்றால், அவருக்காகத் தான் மற்றவர்கள் அலைகிறார்களே தவிர, அவரல்ல.
தூது விட்ட, அம்மாவின் செயல் உங்களுக்கு உயர்ந்ததாக தெரியும். அது உங்களுக்குத் தேவையானது - அதில் தவறேதுமில்லை.
இன்று ஒவ்வொருவரும், அவரவர் இனத்தின் சுபிட்சத்திற்காகப் பாடுபடுவதும், பேசவும் செய்கையில், நீங்கள் அவ்வாறு செய்தால், அதில் தவறேதுமில்லை.
ஆனால், அதற்காக, நிகழ்வுகளை மாற்றிக் கூறாதீர்கள்.
எல்லோரும் உங்களை பண்பான பதிவாளர் என்று கூறுகிறார்கள் - நான் அதை மதிக்கிறேன்.
நன்றி.
அன்புடன்
நண்பன்
டி செ தமிழன்
மிக்க நன்றி.
தொடர்ந்து வாசித்து வாருங்கள்.
அன்புடன்
டி செ தமிழ்ன்
குஷ்புவுக்கு ஆதரவாக, ஒரு திரை விழாவில் சுகாசினி பேசினார்.
தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது என்று.
என்னை இப்படி நடத்தியிருந்தால் கிழித்திருப்பேன் (தமிழர்கள்ளை) என்றார்.
இந்தப் பேச்சைக் கண்டிப்பது தான் தவறென்கிறார்கள்.
அதாவது பார்ப்பனர்கள்.
பார்ப்பனர்கள் சுகாசினிக்கு ஆதரவாக அணி திரள்வட்தானால், இந்தப் பிரச்சினை, பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதோர் என மாறி விட வாய்ப்பிரூக்கிறது என்றார் கலைஞர்.
அதற்கூத் தான் இத்தனை திட்டும்.
போலியன்
மிக்க நன்றி - உங்கள் கருத்திற்கு..
அவா கூட்டம் எத்தனை குத்து வேண்டுமானாலும் குத்தி விட்டுப் போகட்டும்.
நீண்ட நாட்களுக்கு இது நடவாது என்பதால், இப்பொழுது தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.
கவலைப்படாதீர்கள்.
இதற்கெல்லாம் அசந்து விடமாட்டேன்.
அன்புடன்
நண்பன்
இந்த கட்டுரையில் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது .. நன்றி நண்பன்..
நன்றி மன்மதன்
படித்து கருத்து சொன்னமைக்கு.
விரைவில் விரிவாக பதில் எழுதுங்கள்
நன்றி
Post a Comment
<< Home